அமெரிக்காவுடன் உறவு கொண்டாட நாட்டு மக்களை பலியிடுகிறது அரசு - திஸ்ஸ வித்தாரண கடும் கண்டனம்     

Published By: Digital Desk 3

24 Jun, 2022 | 04:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வரை எரிபொருள் வரிசையில் இருந்து பதிவாகும் மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பது.

அமெரிக்காவை பகைத்துக்கொள்ளாமலிருக்க நாட்டு மக்களை பலியிடுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாமலிருப்பது வேடிக்கையாகவுள்ளது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகள் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சமூக மட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரசிங்க தலைமையிலான அரசாங்கம் இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை.

மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியினை நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ளார்கள். எரிபொருள்,எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பிலான பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்கிறதே தவிர குறைவடையவில்லை.

எரிபொருள் விநியோகத்தில் தோற்றம் பெற்றுள்ள சிக்கல் நிலைமை நாட்டின் பிரதான பிரச்சினையாக உள்ளது.இதற்கு தீர்வுகாண அரசாங்கம் நடைமுறைக்கு சாத்தியமான எத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் ஒக்டோபர் மாதகாலப்பகுதியில் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேந நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வரை காத்திருக்கும் போது எரிபொருள் வரிசையில் இருந்து பதிவாகும் மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பது. எரிபொருள் வரிசைக்கு செல்பவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிய கண்டத்தில் பெரும்பாலான நாடுகள் ரஸ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்கின்றன.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடைமுறைக்கு சாத்தியமான எத்தீர்மானங்களையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டால் அமெரிக்காவை பகைத்துக்கொள்ள நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருதுகிறார். அமெரிக்காவை பகைத்துக்கொள்ளாமலிருக்க நாட்டு மக்களை பலியிடுவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கத்திடம் பல யோசனைகளை முன்வைத்துள்ளோம். இருப்பினும் இதுவரை சாதகமான பதிலை அரசாங்கம் குறிப்பிடவில்லை. எரிபொருள் மற்றும் எரிவாயு பெறுகைக்கான வரிசை நீண்டு செல்கிறதே தவிர குறைவடையவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44