வடக்கு மாகாண  சபையின் விவசாய, நீா்ப்பாசன, கால்நடை, சுற்றுச் சூழல் அமைச்சினால் வருடந்தோறும் நடத்தி வருகின்ற மரநடுகை  செயற்திட்டம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சொந்த மண் சொந்த மரங்கள் எனும் கருப்பொருளில்  'உள்ளுர் மரங்கள் உயிர்ச் சூழலின் உயிா்நாடி எனும் வகையில் ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்' என்ற வாசகத்துடன் இவ் வருடத்திற்கான மர நடுகை மாதம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண முதலமைச்சா் விக்கினேஸ்வரன் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு மரம் ஒன்றை நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளாா்.