இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கு இந்தியா தயார்-ஜனாதிபதியிடம் இந்திய உயர்மட்ட குழு

Published By: Rajeeban

23 Jun, 2022 | 02:32 PM
image

இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கு இந்தியா தயார் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்மட்ட குழுவினர் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிண்டம் பக்ஷி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார்.வெளிவிவகார செயலாளருடன் இந்திய நிதியமைச்சின் செயலாளர் அஜய்சேத் மற்றும் பிரதம ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலை மற்றும் இந்தியாவின் உதவி குறித்து ஆக்கபூர்வமான பேச்சுக்கள் இடம்பெற்றன,முதலீடுகளை ஊக்குவித்தல் இணைப்பு மற்றும் பொருளாதார இணைப்புகளை வலுப்படுத்துதல் மூலம் இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கு இந்தியா தயாராகவுள்ளது என்பதையும் இந்திய குழுவினர் வலியுறுத்தினர்.

இந்தியாவின் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு இலங்கை எவ்வளவு முக்கியமானது என்பதும் இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

இரு தரப்பும் உறவுகளை மேலும் உறவுகளை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்புகளை வெளியிட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16