கொரோனா தொற்று குழந்தைகளுக்கு 2 மாதம் நீடிக்கும் - ஆய்வில் தகவல்

Published By: Digital Desk 3

23 Jun, 2022 | 02:01 PM
image

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொற்றின் அறிகுறிகள் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக 'லேன்செட் சைல்டு அன்ட் அடோல்ஸ்சென்ட் ஹெல்த்' இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த ஆய்வு டென்மார்க்கில் உள்ள குழந்தைகளிடம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 

அதாவது நீண்ட கால அறிகுறிகள் குழந்தைகளிடையே தொற்று இருப்பதை குறிப்பதாகவும், இது போன்ற பிரச்சினைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியத்தை எழுப்புவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து வயதினருக்கும் 2 மாதங்கள் அல்லது அதற்கு மேலாக குறைந்தபட்சம் ஒரு அறிகுறி காணப்படுவது ஆய்வில் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. 

தொற்றால் பாதிக்கப்பட்ட 3 வயது வரை உள்ள குழந்தைகளில் 40 சதவீதம் பேர் 2 மாதங்களுக்கு மேலாக அறிகுறிகளை அனுபவித்துள்ளனர். 

4 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களில் 38 சதவீதம் பேரும், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 41 சதவீதம் பேரும் நீண்ட கால அறிகுறியை அனுபவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08