காலிமுகத்திடல் போராட்டம் குண்டர்களின் ஒதுங்குமிடமாக மாறியுள்ளது : ஏன் அரசாங்கம்  பார்த்துக்கொண்டிருக்கின்றது - விமல் கேள்வி

Published By: Vishnu

22 Jun, 2022 | 10:39 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பத்தில்  நியாயமான மக்கள் போராட்டமாக இருந்து தற்போது அது, போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் மோசடியாளர்களின் கூட்டாக மாறியுள்ளது.

அதனால் ஏன் அரசாங்கம் அதனை இன்னும் பார்த்துக்கொண்டிருக்கின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்  எதிர்க்கட்சியின் சுயாதீன எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

 நாட்டை அராஜக நிலைமைக்கு மாற்ற பைத்தியகாரர்கள் போன்ற செயற்படும் போராட்டம் தொடர்பில் ஏன் இன்னும் பொறுத்துக்  கொண்டிருக்கின்றீர்கள்? எனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் 22 ஆம் திகதி புதன்கிழமை விஷேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே போதே இவ்வாறு தெரிவித்தார்,

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சேதன பசளை பயிர் செய்கை போன்ற சிறந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட காலிமுகத் திடல் போராட்டம் தற்போது இரசாயன பயிர் செய்கைக்கு ஏற்பட்ட நிலைமை போல் மாறியுள்ளது.

தற்போது அங்கு நாட்டை அராஜகமாக்குவதற்கு போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் மோசடியாளர்கள் பைத்தியகாரத்தனமாக செயற்படுகின்றனர். அரசாங்கம் ஏன் இன்னும் அதனை பாரத்துக்கொண்டிருக்கின்றார்கள் என தெரியாது. 

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையை குழப்பும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இதற்கு ஒரு உதாரணம்   சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் இலங்கைக்கு வந்திருந்த போது, அவர்களின் நடவடிக்கைகளுக்கு காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் தடையேற்படுத்தினர்.

நாடு ஸ்திரமற்ற நிலைமையில் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தி நாணய நிதியத்திடம் உதவி பெற்றுக்கொள்வதை தடுப்பதே  போராட்டகாரர்களின் நோக்கம்.

போராட்டகாரர்கள் நாட்டை அராஜக நிலைமைக்கு மாற்ற பைத்தியகாரர்கள் போன்ற செயற்படும் போது ஏன் இன்னும் பொறுத்துக்  கொண்டிருக்கின்றீர்கள்? காலிமுகத்திடலில் தற்போது இருப்பது, எதிர்கால தேர்தலில் போட்டியிட இருக்கும் சிலர் மாலை நேரத்துக்கு வந்து, வைத்தியம் விளையாடுகின்றனர். காலமுகத்திடலில் இப்போது எந்த நேர்மையான போராட்டமும் இல்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்னர், காலிமுகத்திடல் போராட்ட நாள் ஒன்றில் பொலிஸ்  வாகனங் கள், வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன. போராட்டக்காரர்களை பொலிஸ் வாகனங்க ளில்  ஏற்றிச்செல்வதற்காகவே அவை அங்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்தநிலையில் இலங்கையில் உள்ள அமெரிக்க துாதுவர், பாதுகாப்புக்கு பொறுப்பான முன்னாள் அமைச்சருடன் தொடர்பு கொண்டு, காலிமுகத்திடல் போராட்டக்காரர்ளை கொண்டு செல்லவா இந்த  வாகனங்கள் எடுத்துவரப்பட்டுள்ளன ? என்று வினவியதுடன், அவ்வாறு நடந்தால், சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுக்களில் இருந்து வெளியேறவேண்டியேற்படும் என்று எச்சரித்திருக்கிறார்.இதனையடுத்து அந்த வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57