வடக்கு, கிழக்கில் இளைஞர்கள் திட்டமிட்டு போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கப்படுகிறார்கள் - சிறிதரன் 

Published By: Vishnu

22 Jun, 2022 | 05:35 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம் வசீம்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இளைஞர்கள் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கப்படுகிறார்கள்.

அந்த மாகாணங்களில் போதைப்பொருள் விநியோகத்தில் இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் பங்களிப்பு உள்ளது. போதைப்பொருள் பாவனையாளர்களினால்  இப்பிரதேச மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள்.

ஆகவே சுகாதார சீர்கேட்டை தடுக்கும் வகையில் ஒரு தீர்வு பெற்றுக்கொடுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சிறிதரன் சபையில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் 22 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற சுகாதார நெருக்கடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

நாடு பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ள வேளை சகல துறைகளின் சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. எரிபொருளின் விலையேற்றம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

எரிபொருள் வரிசையில் நின்ற பலர் உயிரிழந்துள்ளார்கள். நாட்டின் பொருளாதார நிலைமை மக்களின் சுகாதார நிலைமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நீர் வெறுப்பு நோய்க்கான மருந்து இன்மையால் சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்ததை அவதானிக்க முடிந்தது. விசர்நாய் கடிக்குள்ளாகி யாழ் வைத்தியசாலைக்கு சென்றவர்கள் தடுப்பூசி இல்லாத காரணத்தினால் சிகிச்சையளிக்கப்படாமல் திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாத்திரமல்ல முழு நாட்டிலும் நீர் வெறுப்பு நோய் மற்றும் பாம்பு தீண்டுதலுக்கான தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

இந்நிலைமை தொடர்ந்தால் நீர் வெறுப்பு நோய்க்கு உள்ளாகுபவர்கள் குரைக்க  வேண்டிய நிலைமை ஏற்படும். சரியான முறையில் சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.

அனலைத்தீவு, நெடுந்தீவு மற்றும் நயினா தீவு தரை வழி தொடர்பில்லாத தீவு பகுதிகள் நெடுந்தீவு  பகுதியில் உள்ள வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக இருந்து தரம் குறைக்கப்பட்டுள்ளது.

சரியான போக்குவரத்து வசதிகள் இந்த வைத்தியசாலைக்கு கிடையாது. அனலைத்தீவு, நெடுந்தீவு மற்றும் நயினா தீவு ஆகிய  பகுதிகளில் வாழும் மக்களின் சுகாதார பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் உள்ளது. அம்புலன்ஸ் வண்டி சேவைக்கு பல முறை கோரிக்கைவிடுத்தும் இதுவரை ஒரு தீர்வு கிடைக்கப்பெறவில்லை.

மருத்துவம் மற்றும் கல்வி துறைகளில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லாத காரணத்தினால் இந்த தீவு பகுதிகளில் வாழும் மக்கள் தங்களின் சொந்த இடங்களை விட்டு பிறிதொரு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள்.ஆகவே தீவகங்களில் உள்ள வைத்தியசாலைகளில் சேவையாற்றும் வைத்தியர் மற்றும் தாதியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் பாரிய குறைப்பாடுகள் காணப்படுகின்றன.மாதகல் மற்றும் பண்டதறிப்பு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

தாதியர் சேவை நியமனத்திலும் பாரிய குறைப்பாடுகள் காணப்படுகின்றன.வடக்க மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் பெருமளவிலான சிங்களவர்கள் தாதியர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் மொழி பிரச்சினை காணப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தமிழ் தாதியர்களை நியமிக்க வேண்டும்.கிளிநொச்சியில் உள்ள வைத்தியசாலைகளில் மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகளை பார்க்கையில் நாடு எத்திசை நோக்கி செல்கிறது  என்பதை  மதிப்பிட முடிகிறது.

நாட்டின் மொத்த இராணுவத்தினரது எண்ணிக்கையில் 70 சதவீதமானோர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளார்கள்.பொலிஸார் உள்ளார்கள் இருப்பினும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனை மிதமிஞ்சியுள்ளது.போதைப்பொருள் விநியோகத்தில் இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் பங்களிப்பு உள்ளது. வடக்கு கிழக்கு மக்கள் போதைப்பொருள் பாவனையாளர்களினால் அச்சத்துடன் வாழ்கிறார்கள் இதற்கு ஒரு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38