தடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபரை சுட்டுக் கொன்ற சம்பவம் : பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 3 பொலிஸாருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

22 Jun, 2022 | 12:06 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு - வாழைத் தோட்டம் பொலிஸ் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியான  மாளிகாவத்தை -  ரயில்வே ஊழியர்கள் விடுதி தோட்டத்தில், தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை சுட்டுக் கொலைச் செய்தமை தொடர்பில் விலச்சிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை  எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. 

கொழும்பு பிரதான நீதிவான்  நந்தன அமரசிங்க இதற்கான உத்தரவை இன்று ( 21) பிறப்பித்துள்ளார்.

விலச்சிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க,  உப்புவேலி பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர்  ருச்சிர சந்திம,  படல்கம பொலிஸ் நிலையத்தின்  பொலிஸ் சார்ஜன் ( 610704) தயாவங்ஷ ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளவர்களாவர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு  ஜூலை முதலாம் திகதி, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ், மாளிகாவத்தை ரயில் ஊழியர்கள் விடுதித் தோட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  சந்துன் லசித்த குமார் எனும்  நபர்  சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து வாழைத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்பியிருந்தனர்.

 இந் நிலையில்,  இந்த சம்பவம் தொடர்பில் 5 பேரை சந்தேக நபர்களாக பெயரிட  சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சுருக்கமுறையற்ற வழக்கு விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறும் வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தனர்.

அதன்படி மேற்படி மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்று (21) நீதிமன்றில் சரணடைந்த பின்னர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்ட மா அதிபர் சந்தேக நபராக பெயரிட ஆலோசனை வழங்கியுள்ள 5 பேரில் ஏனைய 2 பேரும்,  வர்த்தகர் சியாம் படுகொலை வழக்கில்  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தவுடன் சேர்த்து   மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரு  பொலிஸ் கான்ஸ்டபிள்களாவர்.  பொலிஸ் கான்ஸ்டபிள் (51799) சரத் சந்ர, கான்ஸ்டபிள் (61816) கெளும் ஆகியோரே அவர்களாவர்.

  இந்த சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி  ஆரியரத்ன மற்றும்  சார்ஜன்  திஸாநாயக்க ஆகியோர் இது குறித்து இன்று நீதிமன்றுக்கு அறிக்கையிட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22