விஜய்யின் 'வாரிசு' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 4

21 Jun, 2022 | 09:09 PM
image

'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'வாரிசு' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. நாளை தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக அவர் நடிக்கும் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழில் வெளியான 'தோழா' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குவர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வாரிசு'. இதில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எஸ். எஸ். தமன் இசைறமைக்கிறார். தமிழ் பற்றும் தெலுங்கு மொழியில் தயாராகி வரும் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் வம்சியுடன் இணைந்து ஹரி மற்றும் சாலமன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். தமிழ் பதிப்பிற்கான கூடுதல் திரைக்கதை வசனத்தையும், பாடலையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் 'வாரிசு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் விஜயின் ஸ்டைலான தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருப்பதாலும், 'வாரிசு' என்ற படத்தின் தலைப்பிற்கு கீழ் 'தி பாஸ் ரிட்டர்ன்ஸ்' என எழுதி இருப்பதாலும் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்திருக்கிறது. 

இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் கூடுதலாக உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37