ஜனாதிபதி, பிரதமர் என இரு வேறுப்பட்ட இரு அதிகார தரப்பு உருவாகியுள்ளது - அநுரகுமார திஸாநாயக்க

Published By: Vishnu

21 Jun, 2022 | 03:28 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டு மக்கள் ஒன்றிணைந்து பதவி விலகுமாறு வலியுறுத்தும் ஜனாதிபதியும், மக்களால் புறக்கணிக்கப்பட்ட பிரதமரும் ஒன்றிணைந்து எப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.

ஜனாதிபதி, பிரதமர் என இரு வேறுப்பட்ட இரு அதிகார தரப்பு உருவாகியுள்ளது. சிறந்த திட்டங்களை முன்வைக்காமல் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறுவது பயனற்றது என்பதால் ஒரு வார காலத்திற்கு பாராளுமன்றத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க  சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபாநாயகர் தலைமையில் கூடிய போது நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டார்.

 நாட்டில் நெருக்கடி நிலைமை தீவிரமடைந்ததை தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தொடர் மாதக் கணக்கில் கூடுகிறது.பாராளுமன்றில் இடம்பெறும்  கூட்டத்தொடர், வாத பிரதிவாதங்கள் எவையும் மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு ஒர் தீர்வாக அமையவில்லை.

ஆகவே மக்களின் குரலுக்கும்,அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கும் மதிப்பளிக்காத சபையாக பாராளுமன்றம் காணப்படுகிறது.

விசேடமாக  பாராளுமன்றம் பாதுகாப்பிற்கு மத்தியில் கூடும் போது சமூக கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகள் என்ன ,மருந்து தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலைகளில் பிள்ளைகள் உயிரிழந்துள்ளார்கள்,எரிபொருள் கொள்வனவுக்காக வரிசையில் காத்திருக்கும் சாதாரண மக்கள் பலர் உயிரிழந்துள்ளார்கள்.

உரம் இல்லாமல் விவசாயிகள் விவசாய நிலங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், கட்டட நிர்மாண தொழிலாளர்கள் தொழிற்துறையினை கைவிட்டுள்ளார்கள்.பல இலட்சம் தொழிலாளர்கள் தொழில்வாய்புக்களை இழந்துள்ளார்கள். தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.

மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது.அனைத்து போராட்டங்களும் ஜனாதிபதியை இலக்காகக் கொண்டதாக அமைந்துள்ளமை நியாயமானது. மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தவில்லை. தான் தான் நன்றாக செய்தேன் என ஜனாதிபதி தன்னிச்சையான முறையில் செயற்பட்டார்.

நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாத ஜனாதிபதி மக்களுக்கு தலைமை வகிக்க தகுதியற்றவர் என்பது நியாயமானது.

மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காத ஜனாதிபதி ஒரு பயனற்ற பொம்மை போல் செயற்பட்டதால் தான் மக்கள் ஜனாதிபதியை பதவி விலகுமாறு அழுத்தமாக வலியுறுத்துகிறார்கள்.இது நியாயமான கோரிக்கை. இதனை தவறான கோரிக்கை என்று குறிப்பிட முடியாது.

நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு சிவில் அமைப்பினர் உட்பட பல தரப்பினர் சர்வ கட்சி அரசாங்கம்,இடைக்கால அரசாங்கம் உள்ளிட்ட சிறந்த யோசனைகளை முன்வைத்த போது ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கத்தை ஸ்தாபித்தார்.

52 இரண்டு நாள்  அரசியலமைப்பிற்கு முரனாண வகையில் பிரதமர் நியமிக்கப்பட்டதை போன்று ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று ஒருமாத காலத்தை கடந்துள்ள நிலையில் எப் பிரச்சினைக்கும் பிரதமர் தீர்வினை பெற்றுக் கொடுக்கவில்லை மாறாக நெருக்கடிகளின் பேச்சாளரை போன்று செயற்படுகிறார்.

நெருக்கடிகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள மகாநாயக்க தேரர்கள்,சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்வைத்த யோசனைகளில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டன இருப்பினும் அவற்றை கருத்தில் கொள்ளாது ஜனாதிபதி திருட்டுத்தனமான முறையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி,பிரதமர் உட்பட பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.ஜனாதிபதி உட்பட தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் தோல்வி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரம் மற்றும் சமூக  மட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள  பிரச்சினைக்கு குறுகிய காலத்தில் தீர்வு காணும் திட்டத்தை அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை.

 நாட்டு மக்கள் ஒன்றிணைந்து பதவி விலகுமாறு வலியுறுத்தும் ஜனாதிபதியும்,மக்களால் புறக்கணிக்கப்பட்ட பிரதமரும் ஒன்றினைந்து எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.

ஜனாதிபதி,பிரதமர் என இரு வேறுப்பட்ட இரு அதிகார தரப்பு உருவாகியுள்ளது.சிறந்த திட்டங்களை முன்வைக்காமல் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறுவது பயனற்றது என்பதால் ஒருவார காலத்திற்கு பாராளுமன்றத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52