ஜனாதிபதியின் பிறந்த தினத்தை மையப்படுத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : கைது செய்யப்பட்ட 21 பேருக்கும் பிணை 

Published By: Digital Desk 4

20 Jun, 2022 | 08:11 PM
image

(எம்.எப்.எம் பஸீர்)

கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலதாரி நட்சத்திர ஹோட்டலுக்கு முன்பாக உள்ள ஜனாதிபதி செயலக நுழைவாயில், நிதியமைச்சின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 21பேரையும் பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (20) உத்தரவிட்டார்.

குறித்த  21 பேரும் இன்று (20) பிற்பகல் கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்த போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்து நீதிவான் மேற்படி பிணை உத்தரவை பிறப்பித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 21பேரும் முதலில் பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் கோட்டை பொலிஸார் ஊடாக நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர்.

ஆராச்சிலாகே சிறில், இசுறு வர்ணகுலசூரிய,ரொஷான் அலி தெனிஷ் அலி, சதுரங்க சந்திமால் கமகே, ருக்ஷான் சமரகோன் பெந்தர ஆராச்சி,நூர் மொஹமட் பௌஸர், மொஹமட் பாஸிம்,நிலந்த சம்பத் பிரசாத், கொரளகே பந்துல பிரசாத், ஹேரத் முதியன்செலாகே தென்கே கெதர பொடி மெனிகே,சமிர மதுசங்ப சிறிவர்தன, லியனகே சுதத் லக்ஷ்மன்,சாருக கிம்ஹான்,சதுரிக சாஷேனி,மொஹட்டிலாகே  நிலந்தி,மதியாவதன் நிஷாந்தனி ஆகியோரே இவ்வாறு நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர்.

கோட்டை பொலிஸார் சார்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தில்ருக் தலைமையிலான குழுவினர் நீதிமன்றில் ஆஜராகி விடயங்களை முன்வைத்ததுடன்,சந்தேக நபர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான குழுவினர் மன்றில் ஆஜராகினர்.

இந்நிலையில் நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைத்த பொலிஸார் நேற்று (19) இரவு முதல் முன்னெடுக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் தொடர்பிலும் இடையூறு ஏற்பட்டதாக குறிப்பிட்டனர்.

இதனையடுத்து பிணை கோரிக்கையை முன்வைத்து ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வாதங்களை முன்வைத்தார்.

'தனையடுத்து நீதிவான் திலிக கமகே தனது தீர்மானத்தை அறிவித்தார். சுந்தேக நபர்களுக்கு எதிராக தண்டனை சட்டக்கோவையின் 142,185,332 ஆகிய அத்தியாயங்களின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இவையனைத்தும் பிணையளிக்க கூடிய குற்றங்களாகும்.முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராயந்து பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்து சந்தேக நபர்களை தலா 5 இலட்சம் பெறுமதியிலான சரீர பிணையில் செல்ல அனுமதிக்கிறேன் என நீதிவான் தீர்மானத்தை அறிவித்து வழக்கை அடுத்த மாதம் (ஜூலை )22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09