சால்மோனெல்லோஸிஸ் எனப்படும் தொற்று பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Vishnu

20 Jun, 2022 | 08:54 PM
image

எம்மில் பலரும் தங்களது இல்லத்தில் பறவைகளை செல்ல பிராணிகளாக வளர்க்கிறார்கள். மேலும் சில பிராந்தியங்களுக்கு துவிச் சக்கர வாகனம் மூலமாகவோ அல்லது நான்கு சக்கர வாகனம் மூலமாகவோ பயணம் மேற்கொள்கிறார்கள்.

மேலும் சில தவிர்க்க முடியாத தருணங்களில் அசுத்தமான குடிநீர் அல்லது சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது சல்மோனல்லோசிஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தத் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் வயிற்றுப்போக்கு உண்டாகும். இதற்கு உரிய தருணத்தில் சிகிச்சை பெறாவிட்டால் வயிற்றுப்போக்குடன் காய்ச்சலும் ஏற்பட்டு, உடல் சுகவீனமடைந்து பாரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்.

வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு, காய்ச்சல், குமட்டல், வாந்தி, தலைவலி, குளிர், மலத்தில் இரத்தம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

அத்துடன் அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.

சல்மோனல்லோசிஸ் எனும் தொற்று சால்மோனெல்லா எனப்படும்  பாக்டீரியா கிருமிகளால் ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்பின் காரணமாக மூன்று நாட்கள் முதல் ஒரு வார காலம் வரை வயிற்றுப்போக்கு நீடிக்கும்.

சிலருக்கு பத்து நாட்கள் வரைகூட வயிற்றுப் போக்கு உண்டாகும். ஆனால் இந்த வகையான தொற்று பாதிப்பால் குடல் இயல்புநிலை திரும்புவதற்கு பல மாதங்கள் ஆகக்கூடும்.

சிலருக்கு இந்த வகை தொற்று டைபாய்டு காய்ச்சலை ஏற்படுத்திவிடும். இதன் காரணமாக சிலருக்கு குறைவாக சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் நிறம் மாற்றமடைதல், வாய் மற்றும் நாக்கு பகுதி உலர்ந்து காணப்படுதல், இயல்பான அளவை விட கூடுதலாக சோர்வு ஏற்படுதல். போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

இதனால் மருத்துவரை சந்தித்து முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இதன் போது ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை முறையாக பரிசோதித்து அதற்குரிய சிகிச்சையை பெறுவதுதான் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெற இயலும். அத்துடன் பயணங்களின் போதும் சுத்தமான குடிநீரை குடிப்பதையும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். செல்லப் பிராணிகளான பறவைகள் மூலம் இத்தகைய பாக்டீரியாக்கள் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அதனை வளர்ப்பவர்களும் உரிய எச்சரிக்கையுடன் வளர்க்க வேண்டும்.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04