சீனாவிலிருந்து இலங்கைக்கான விமான சேவைகள் அதிகரிப்பு - ஜனாதிபதியுடனான சந்திப்பில் சீன தூதுவர் தெரிவிப்பு

Published By: Vishnu

20 Jun, 2022 | 08:42 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை மற்றும் சீனாவிற்கிடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விமான சேவைகளை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சீனா, இவ்வாரம் முதல் இலங்கைக்கு 3 விமானங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.

இலங்கைக்கான சீன தூதுவர் கியூ சென்ஹொங் கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள ஒத்துழைப்புக்கள் , எதிர்காலத்தில் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ள பொருளாதார மற்றும் மனிதாபிமான நிவாணரங்கள் தொடர்பில் தூதுவர் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளார்.

சீனாவில் கல்வி பயிலும் இலங்கையின் மருத்துவத்துறை மாணவர்கள் மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படுத்தல், இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துதல் குறித்து இதன் போது விரிவாக விவாதிக்கப்பட்டது.

அத்தோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி அனுப்பி வைத்த வாழ்த்து செய்தியும் இந்த சந்திப்பின் போது தூதுவரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் நட்பு நாடாக சீனா வழங்கி வரும் உதவிகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51