உயர் நீதிமன்றின் தீர்மானம் வரும் வரை எந்த பதவியையும் ஏற்கப் போவதில்லை  தம்மிக பெரேரா சார்பில் உயர் நீதிமன்றுக்கு உறுதியளிப்பு

Published By: Digital Desk 4

20 Jun, 2022 | 07:14 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

தனது நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவினை முன் கொண்டு செல்வது தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம் அறிவிக்கப்படும்  வரை  தான் பாராளுமன்ற உறுப்பினராகவோ  அமைச்சராகவோ  சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளப் போவதில்லை என  பிரபல வர்த்தகர்  தம்மிக பெரேரா  உயர் நீதிமன்றுக்கு  உறுதியளித்துள்ளார்.  

தம்மிக பெரேராவின் நியமனத்தை ஆட்சேபித்து உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை  மீறல் மனு தாக்கல் | Virakesari.lk

பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவை தொடர்ந்து ஏற்பட்ட, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு  பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளமையை ஆட்சேபித்து உயர் நீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு  இன்று ( 20)  பரிசீலனைக்கு வந்தது. இன்றைய பரிசீலனைகளின் இறுதியில், தம்மிக பெரேரா சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி  ரொமேஷ் டி சில்வா இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார்.

அரசியலமைப்பின் 99 அ உறுப்புரை பிரகாரம், தம்மிக பெரேராவின்  நியமனம் சட்ட விரோதமானது என குறிப்பிட்டே  இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து  அகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

 இன்று இம்மனுவானது உயர் நீதிமன்ற நீதியர்சர்களான பிரியந்த ஜயவர்தன தலைமையிலான யசந்த கோதாகொட மற்றும்  அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைச் செய்யப்பட்டது.

அரசியலமைப்பின்  99 அ உறுப்புரை பிரகாரம், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட வேட்பு மனுக்கள் அல்லது தேசியப் பட்டியலில் ஒருவரது பெயர் சேர்க்கப்பட்டிருந்தால் மட்டுமே, அத்தகைய வெற்றிடத்தை நிரப்ப ஒரு நபர் பரிந்துரைக்கப்படுவதற்கு தகுதியுடையவர் என மனுதாரர் சார்பில் இதன்போது  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி அரசியலமைப்பின் 99 அ உறுப்புரையின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தேசிய பட்டியலில் அல்லது 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக அக் கட்சியினால்   எந்தவொரு தேர்தல் மாவட்டத்திலும் சமர்ப்பிக்கப்பட்ட  வேட்புமனுவிலும் தம்மிக்க பெரேராவின் பெயர் இல்லை என சுட்டிக்காட்டும் மனுதாரர்,  அதனூடாக குறித்த நியமனம் நியாயமற்ற சட்ட விரோதமான செயல் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பெருந்தோட்டம், மின்சாரம் போன்ற பல்வேறு துறைகளில் பல்வேறு வர்த்தக முயற்சிகளில் தம்மிக பெரேராவின் உரிமங்கள் தொடர்பில் மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், பாராளுமன்ற உறுப்பினராகவும்,  அமைச்சரவை அமைச்சராகவும் தம்மிக பெரேரா நியமிக்கப்படுவதன் ஊடாக அரசியலமைப்பின் 91 ( 1) உ சரத்து மீறப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

 இந் நிலையில் அரசியலமைப்பின் 10, 12,14 ஆம் உறுப்புரைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள சிந்தனை, மனச் சாட்சி, சமத்துவம், கருத்து உள்ளிட்ட சுதந்திரங்கள் மீறப்படுவதாக அறிவிக்குமாறு குறித்த அடிப்படை மனுவூடாக மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

 இந் நிலையில் இன்று பரிசீலிக்கப்பட்ட இந்த அடிப்படை உரிமை மீறல் மனு, நாளைய தினமும் தொடர்ச்சியாக பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47