ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் - சஜித்

Published By: Vishnu

20 Jun, 2022 | 03:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தினால் ஒருபோதும் தீர்வு காண முடியாது.

கோட்டா- ரணில் நாட்டையும், நாட்டு மக்களையும் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்காமல் பொறுப்பினை எம்மிடம் ஒப்படைத்து விட்டு பதவி விலக வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து குறுகிய காலத்திற்குள் அடிப்படை பிரச்சினைகளுக்கு எம்மால் தீர்வு காண முடியும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 20 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ உட்பட அவர் தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.

மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கத்தினால் ஒருபோதும் தீர்வு காண முடியாது. மக்கள் நிம்மதியாக உயிர்வாழும் சூழல் கிடையாது.

எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெறும் சிரமங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள். இன்றும் வரிசை யுகம் நீண்டு செல்கிறது.

மக்களின் அடிப்படை பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்கிறது.கோட்டா- ரணில் அரசாங்கத்திற்கு தேசியத்திலும், சர்வதேசத்திலும் அங்கிகாரம் கிடையாது.

வாக்குறுதி வழங்கியதை போன்று மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டம் அரசாங்கத்திம் கிடையாது.

நாடு எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் சிறந்த திட்டம் எம்வசம் உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

அடிப்படை பிரச்சினைக்கு குறுகிய காலத்தில் தீர்வினை எட்டி தேர்தல் ஒன்றுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நிலையான பொருளாதார ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தி சகல மக்களும் பயன்பெறும் செயற்திட்டங்களை முன்னோக்கி செல்வது அத்தியாவசியமானது.வாக்குறுதிகளை நிறைவேற்றும்  மனித வளம் எம்வசம் உள்ளது.

குறுகிய காலத்தில் நாட்டை முன்னேற்றும் திட்டம் எம்வசமுள்ளது. கோட்டா-ரணில் அரசாங்கத்திற்கு எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.

நாட்டையும்,நாட்டு மக்களையும்  தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்காமல் பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்து விட்டு பதவி விலகுங்கள்.பொறுப்பினை ஏற்று  நெருக்கடிகளுக்கு தீர்வு காண நாங்கள் தயார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24