அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா..? எடப்பாடி பழனிசாமிக்கு ஒ.பன்னீர் செல்வம் பகிரங்க கடிதம்

Published By: Rajeeban

20 Jun, 2022 | 01:07 PM
image

ஒற்றைத் தலைமை பிரச்சனை முடியாத நிலையில் பொதுக்குழுவை தள்ளிவைக்க வேண்டும் ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக ஒ.பன்னீர்செல்வத்திற்கு மாவட்ட செயலாளர்கள் எழுதிய கடிதத்தை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் வாசித்து காட்டினார்.

அதில் அவர் கூறுகையில், "அசாதாரண சூழல் நிலவுவதால் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும். பொதுக்குழுவில் கடந்த கால நடைமுறைகள் பின்பற்றப்படாது என்று தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சிறப்பு அழைப்பாளர்களை பொதுக்குழு கூட்டத்திற்கு அழைக்காதது ஏன்?" என்று வைத்தியலிங்கம் கூறினார். மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், "அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எழுதிய கடிதம் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. 15 மாவட்ட செயலாளர்கள் நேரடியாக ஆதரித்துள்ளனர். 15 மாவட்ட செயலாளர்கள் நடுநிலை வகிக்கின்றனர்.

எடப்பாடி தரப்பு, சர்வாதிகார போக்குடன் ஒற்றைத் தலைமையை கொண்டுவர முயற்சிக்கிறது. கட்சி உடையாமல் இருக்க வேண்டும் என்பதே ஒ.பன்னீர்செல்வம் தரப்பின் எண்ணம். எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பதில் வந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று வைத்தியலிங்கம் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47