நஷ்டத்தை போக்கவே ஸ்ரீலங்கா விமானசேவை குத்தகைக்கு விடப்பட்டது

Published By: Ponmalar

31 Oct, 2016 | 07:37 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஸ்ரீலங்கா விமானசேவை தொடர்ந்து நஷ்டமடைவதை தடுப்பதற்கே குத்தகைக்கு அல்லது நிறுவனம் ஒன்றுடன் இணைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அரச பொது முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்."

அவர் அங்கு தொடர்ந்தகூறுகையில்,

ஸ்ரீலங்கன் விமானசேவை நட்டமடைந்தமைக்கு அதன் நிர்வாகம் மற்றும் தலைவரே பொறுப்பு கூறுவேண்டும். தொடர்ந்து இந்த விமானசேவை நட்டமடைவதை தடுக்கும் முகமாகவே அதனை குத்தகைக்கு அல்லது தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

கடந்த வருடத்தில் சிறிலங்கன் விமானசேவையில் 30 மில்லியன் ரூபா நஷ்டமடைந்துள்ளது. அதனை தற்போது நாங்கள் அதன் நஷ்டத்தில் அறைவாசிவரை குறைத்துள்ளோம். அதாவது சுமார் 15  16 மில்லியன் ரூபா வரை குறைவடைந்தள்ளது. அத்துடன் குத்தகைக்கு வழங்குவதற்கு பகிரங்கமாக அறிவித்துள்ளோம். அதேபோன்று தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இணைத்துக்கொள்வதற்கு தேசிய மற்றும் சர்வதேச நிறுனங்களிடமிருந்து பகிரங்கமாக அறிவித்தல் விடுத்திருந்தோம். அதனடிப்படையில் 8 நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. இந்த நிறுவனங்களிடம் விமானங்கள் இல்லை. இவர்கள் அனைவரும் முதலீட்டாளர்கள்.

மேலும் மிஹின் லங்கா சேவை ஊடாக மக்களுக்கு ஆன்மிக பயணங்களை மேற்கொள்ள  நிவாரணம் கிடைத்தபோதும் அதனால் நாட்டுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நாங்கள் எதிர்ப்பில்லை. ஆனால் நாடு நஷ்டமடைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது அரச பொருளாதார மற்றும் நிதி கொள்கையை பின்பற்றியே மேற்கொள்ளவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்