துவிச்சக்கர வண்டியிலிருந்து கீழே விழுந்த அமெரிக்க ஜனாதிபதி பைடனால் பரபரப்பு

Published By: Digital Desk 4

19 Jun, 2022 | 10:00 PM
image

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது துவிச்சக்கர வண்டியில் டெலாவர் பிராந்தியத்தில் ரெஹோபோத் கடற்கரையிலுள்ள  தனது இல்லத்திற்கு அருகிலுள்ள  கேப் ஹென்லோபென்  பிராந்திய பூங்காவிற்கு அந்நாட்டு நேரப்படி நேற்று  சனிக்கிழமை (18.06.2022) சென்றபோது, அவர் அந்த துவிச்சக்கரவண்டியிலிருந்து  கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு பாதுகாவலாக சென்ற  அமெரிக்க இரகசிய சேவைப் பிரிவினர் விரைந்து சென்று  கீழே விழுந்த ஜனாதிபதியை தூக்கி விட்டனர்.

இந்த சம்பவத்தில் ஜோ பைடனுக்கு (79 வயது)  காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தன்னைச் சூழ்ந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு ஜோ பைடன்  விளக்கம் அளிக்கையில் தான் நன்றாக இருப்பதாகக் கூறினார்.

தலைக்கவசம் அணிந்து பயணித்த ஜோ பைடன் வழியில் தன்னை எதிர்கொண்ட நலன் விரும்பிகளைக் கண்டு அவர்களுடன் உரையாடும் முகமாக துவிச்சக்கரவண்டியிலிருந்து இறங்க முயற்சித்த போதே  அவர்  தனது  வலது பக்கமாக நிலத்தில் விழுந்து உருண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 எனினும் இந்த சம்பவத்தையடுத்து  தனது மெய்ப்பாதுகாவலர்களின் துணையுடன் எழுந்த  அவர், அங்கு கூடியிருந்தவர்களுடன் புன்னகையுடன் உரையாடினார்.

 ஜோ பைடனுக்கு இந்த சம்பவம் தொடர்பில் மருத்துவ கவனிப்பு எதுவும் தேவைப்படவில்லை எனவும் அவர் நலமாக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52