கள்ளச் சந்தையில் எரிபொருளுக்கு பதிலாக 77 ஆயிரம் ரூபாவுக்கு தண்ணீரை வாங்கிய மூவர் -  கிளிநொச்சியில் சம்பவம்

Published By: Digital Desk 4

19 Jun, 2022 | 05:17 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர், கள்ள சந்தையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக சுமார் 77 ஆயிரம் ரூபா பணத்தை பறிகொடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவங்கள் கிளிநொச்சியில்  கனகாம்பிகை குளம், பாரதிபுரம், மலையாளபுரம் பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கனகாம்பிகைகுளம் பகுதியில் 12 ஆயிரம் ரூபாய்க்கு  டீசல் வாங்கிய நபருக்கு டீசலுக்கு பதிலாக தண்ணீர் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது,

அதேபோல் பாரதிபுரத்தில் 35 ஆயிரம் ரூபாவுக்கு டீசல் வாங்கிய நபருக்கும் டீசலுக்குப் பதிலாக தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மலையாளபுரம் பகுதியில் 30 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் வாங்குவதற்கு பணம் கொடுத்த நிலையில், குறித்த நபர்கள் பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தினசரி கள்ள சந்தையில் எரிபொருள் வாங்க முயற்சித்து ஏமாற்றப்பட்டுவரும் நிலையில் பொதுமக்கள் இனியும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43