ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவுகளே நாட்டின் நெருக்கடிக்கு காரணம் - சந்திம வீரக்கொடி

Published By: Vishnu

19 Jun, 2022 | 03:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானத்தை பாராளுமன்றம் எடுக்கவில்லை, ஜனாதிபதியே தன்னிச்சையான முறையில் தீர்மானங்களை முன்னெடுத்தார்.

ஜனாதிபதியின் அதிகாரத்தை  வரையறைக்குட்படுத்தாமை பாராளுமன்றத்தின் தவறு என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

காலியில் 18 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் நாட்டு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

எரிபொருள் வரிசையில் நிற்கும் மக்கள் முழு அரசியல் கட்டமைப்பையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.பாதுகாப்பு தரப்பினருக்கும்,பொது மக்களுக்குமிடையில் அமைதியற்ற தன்மை காணப்படுகிறது.

நாடு தற்போது பல்துறைகளில் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு பாராளுமன்றம் பொறுப்புக்கூற வேண்டும் என பொது மக்கள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலான எத்தீர்மானத்தையும் பாராளுமன்றம் எடுக்கவில்லை.

முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானத்தை ஜனாதிபதியே தன்னிச்சையான முறையில் எடுத்தார்.

நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை வரையறைக்குட்படுத்தாமை பாராளுமன்றத்தின் தவறு . இத்தவறு அரசியலமைப்பின் 21 ஆவது  திருத்தம் ஊடாக திருத்திக்கொள்ளப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அரசாங்கம் முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயாராகவுள்ளோம். அரசியல் நெருக்கடிக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள தீர்வினை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.சிறந்த அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08