கனரக வாகனங்களுக்கு விசேட போக்குவரத்து முறைமை

Published By: Ponmalar

31 Oct, 2016 | 06:35 PM
image

(ந.ஜெகதீஸ்)

ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் நாளை முதல் 3 க்யூப்க்கு மேல் மணல் ஏற்றிசெல்லும் கனரக வாகனங்களுக்கான விசேட போக்குவரத்து நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதனடிப்படையில் குறித்த லொறிகளை மாலை 6 மணி தொடக்கம் காலை 6 மணிவரையிலான காலப்பகுதியிலேயே பிரதான நகரங்களில் செழுத்த முடியும் என மாகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவிதத்துள்ளது. 

இதேவேளை ஜனவரி மாதம் முதல் ஜீ பி எஸ் கருவிகளை பொருத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படும் இதனால் பிரதான நகரங்களில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என  மாகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர்  உதய ஆர்கமகே தெரிவித்தார் 

பத்தரமுல்லையில் அமைந்துள்ள மாகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் தலைமையகத்தில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதைய சூழலில் அதிகளவான வாகன நடமாட்டம் காரணமாக  பிரதான நகரங்களில் கடும் போக்கு வரத்து நெரிசலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 100 கிலோமீட்டர் தூரத்தை  பயணிப்பதாக இருந்தால்கூட 5 மணியாத்தியாலத்திற்கு மேலான கால அளவு எடுக்கின்றது. இதனால் காலை வேளைகளில் பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் தொழிலுக்கு செல்வோரும் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் சுற்றாடல் அமைச்சு புவிசரிதவியல் திணைக்களம் பொலிஸ் போக்குவரத்து திணைக்களம் இணைந்து பொது போக்கு வரத்து தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டது. சேகரிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தரவுகளின் அடிப்படையில் பிரதான நகரங்களில் போக்குவரத்து நெரிசல்களில் அதிகளவான கனரக வாகனங்கள் பயணிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்தவகையில் மேல் மத்திய ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள பிரதான நகரங்களில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடனான பல சுற்று பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து   குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02