பொதுஜன பெரமுனவின் பிரதமர் தலைமையில் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் - ஆளுந்தரப்பு பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

Published By: Vishnu

19 Jun, 2022 | 02:17 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே 69 இலட்சம் மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

ஆகவே பொதுஜன பெரமுன கட்சியின் பிரதமர் தலைமையிலான புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும் தரப்பு குழு கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை,சமூக மற்றும் அரசியல் நெருக்கடி குறித்து ஆளும் தரப்பினர் உறுப்பினர்களுக்கும்,ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை இன்று 19 ஆம் திகதி ஞாயிற்றகிழமை மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையலான சந்திப்பு கடந்த வாரம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினோம்.

பொருளாதார பிரச்சினைக்ளுக்கு தீர்வு காண்பதை விடுத்து அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கம் அதிக அவதானம் செலுத்தி வருகிறது என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

அரசியலமைப்பு திருத்தம் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வாக அமையாது.புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்குவது ஏற்றுக்கொள்ள கூடியதாக அமைந்தாலும்,தற்போதைய நிலைமைக்கு அது முற்றிலும் மக்களாணைக்கு முரணானது ஏனெனில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் அல்ல,2020ஆம் ஆண்டு அவரை மக்கள் ஜனநாயக ரீதியில் புறக்கணித்துள்ளார்கள்,ஆகவே அவர் தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள போவதில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் என்பதற்காகவே 69 இலட்ச மக்கள் 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்,ஆகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதமர் தலைமையிலான புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.பொருளாதார பிரச்சினைக்கு வெகுவிரைவில் நிலையான தீர்வு எட்டப்படும்.அரசியல் ரீதியிலான பிரச்சினைக்கு தீர்வு காண நாட்டு மக்களுக்கு வெகுவிரைவில் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சகல அரசியல் கட்சிகளும் பாராம்பரியமான அரசியல் கொள்கையில் இருந்து வெளியேறி பொதுக்கொள்கைக்கமைய செயற்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.தற்போதைய நிலையில் ஆளும் மற்றும் எதிர்தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை,அரசியல் மற்றும் சமூக நிலைவரம் குறித்து ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.இச்சந்திப்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21