3 ஆவது போட்டியில் வெற்றிபெறும் குறிக்கோளுடன் இலங்கை

Published By: Vishnu

19 Jun, 2022 | 01:24 PM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக பல்லேகலையில் நடைபெற்ற 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு ஆகியவற்றினால் அபார வெற்றியீட்டி தொடரை சமப்படுத்திய இலங்கை, 2ஆவது நேரடி வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் கொழும்பில் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 3ஆவது போட்டியை எதிர்கொள்ள உள்ளது.

இதேவேளை, வனிந்து ஹசரங்க இல்லாமலே 2ஆவது போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை, மிகுந்த நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளது.

சுழல்பந்துவீச்சாளர்களான தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லாலகே, வேகபந்து வீச்சாளர்களான துஷ்மன்த சமீர, சாமிக்க கருணாரட்ன ஆகிய அனைவரும் சிறப்பாக பந்துவீசியிருந்தனர்.

முதலிரண்டு போட்டிகளில் இலங்கை சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகபட்ச பங்களிப்பை வழங்கியுள்ள சரித் அசலன்க இதைவிட சிறப்பாக துடுப்பெடுத்தாடி கணிசமான ஓட்டங்களைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆரம்ப வீரர்களான தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோரும் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி கணிசமான ஓட்டங்களைப் பெறுவது அவசியமாகும்.

மத்திய வரிசையில் அணித் தலைவர் தசுன் ஷானக்க, சாமிக்க கருணாரட்ன, துனித் வெல்லாலகே ஆகியோரும் துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கினால் அணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமையும்.

மறுபுறத்தில் ஏற்கனவே சில வீரர்கள் உபாதைக்குள்ளாகி இருப்பதால் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள அவுஸ்திரேலியாவுக்கு இப்போது சிரேஷ்ட வீரரும் முன்னாள் தலைவருமான ஸ்டீவன் ஸ்மித்தும் உபாதைக்குள்ளாகி இருப்பது  மேலும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

வீரர்கள் உபாதைக்குள்ளாகி இருப்பதால் இலங்கை வருகை தந்துள்ள அவுஸ்திரேலிய ஏ அணியிலிருந்து ஓரிரு வீரர்கள் பிரதான அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வோர்னர், அணித் தலைவர் ஆரோன் பின்ச், ட்ரவிஸ் ஹெட், மார்னுஸ் லபுஸ்சான், அலெக்ஸ் கேரி, கெமரன் க்றீன், க்ளென் மெக்ஸ்வெல் என 7ஆம் இலக்கம் வரை சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இருக்கின்றனர்.

எனவே இன்றைய பகல் இரவு போட்டி இரசிகர்களுக்கு பெருவிருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

அணிகள்

இலங்கை: தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்க (தலைவர்), சாமிக்க கருணாரட்ன, துனித் வெல்லாலகே, துஷ்மன்த சமீர, ஜெவ்றி வெண்டர்சே அல்லது ப்ரவீன் ஜயவிக்ரம, மஹீஷ் தீக்ஷன.

அவுஸ்திரேலியா: டேவிட் வோர்னர், அணித் தலைவர் ஆரோன் பின்ச், ஸ்டீவன் ஸ்மித் அல்லது ட்ரவிஸ் ஹெட், மார்னுஸ் லபுஸ்சான், அலெக்ஸ் கேரி, கெமரன் க்றீன், க்ளென் மெக்ஸ்வெல், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்வெப்சன், மெத்யூ குனெமான், ஜொஷ் ஹேஸ்ல்வூட்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41