‘கூறாய்வு' செய்யும் நட்டி

Published By: Vishnu

19 Jun, 2022 | 10:38 AM
image

ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய படத்திற்கு 'கூறாய்வு' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

'சாயம்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் அன்டனி சாமி இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படம் 'கூறாய்வு'. இதில் நட்டி என்கிற நட்ராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'முந்திரிகாடு' பட புகழ் நடிகை சுபபிரியா மலர் நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகர்கள் மனோபாலா, இளவரசு, போஸ் வெங்கட், ரவிமரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு நாக உதயன் இசையமைக்கிறார்.

கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராக இருக்கும் இந்த திரைப்படத்தை ரெட் கிரீன் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முருகானந்தம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' இறந்த பிறகு வைத்தியசாலையில் நடத்தப்படும் போஸ்ட்மார்ட்டம் எனப்படும் உடற்கூறாய்வு எனும் விடயத்தை மையப்படுத்தி இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இதன் கதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் காரைக்குடி, புதுக்கோட்டை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37