“வீட்ல விசேஷம்” படத்தின் திரைவிமர்சனம்

Published By: Vishnu

17 Jun, 2022 | 10:11 PM
image

குடும்ப தலைவர் சத்யராஜ், அவரது மனைவி ஊர்வசி, ஆசிரியராக பணியாற்றும் மகன் ஆர். ஜே. பாலாஜி மற்றும் பாடசாலையில் பயிலும் இளைய வாரிசு, சத்யராஜின் அம்மா என குறைவான எண்ணிக்கையுள்ள உறுப்பினர்களுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

ஆசிரியராக பணியாற்றும் ஆர் ஜே பாலாஜி தன் மனதைக் கவர்ந்த காதலியான அபர்ணா பாலமுரளியை திருமணம் செய்து கொள்வதற்காக  நிச்சயம் நடைபெறுகிறது.

இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக சத்யராஜ் மனைவியான ஊர்வசி கருத்தரிக்கிறார். இந்த விடயத்தை அந்த குடும்ப உறுப்பினர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும், இது போன்ற அரிதாக நிகழும் சம்பவத்தை சமூகம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதும் குறித்து விவரிக்கிறது கதை.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இளம் தம்பதிகளின் குழந்தை பாக்கியம் என்பது இயல்பானதாக இல்லாமல், 25 சதவீதத்திற்கு மேல் மருத்துவ தொழில்நுட்பத்துடன் நடைபெறுகிறது.

இந்த யதார்த்தமான நிலையில், ஒரு குடும்பத்திலுள்ள மூத்த வயதுள்ள பெண்மணி கருத்தரித்தால் ஏற்படும் உளவியல் சிக்கல்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கும் இயக்குநர்களை பாராட்ட வேண்டும்.

'எல் கே ஜி', 'மூக்குத்தி அம்மன்' என ஹிட் படங்களை கொடுத்த ஆர். ஜே. பாலாஜி இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை எதிர்மறையான உத்தி மூலம் உணர்த்தியிருக்கிறார்.

ஹிந்தியில் வெளியான திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்றாலும், அதிலிருந்து பல காட்சி கோணங்களை கொப்பி அடித்த படக்குழுவினர், அதில் இடம்பெற்றிருந்த இயல்பு நிலையும், கதாபாத்திரத்தின் யதார்த்த நிலையும் சரியான அளவில் இடம்பெறச் செய்வதை கவனிக்கத் தவறி விட்டனர்.

இதனால் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் உளவியல் சவால்கள், பார்வையாளர்களுக்கு கடத்தப்படுவதில் தடை ஏற்பட்டு, சோர்வு உண்டாகிறது.

சத்யராஜ் தன் வயதிற்கே உரிய இயல்பான நடிப்பை வழங்கி அந்த கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார். ஊர்வசி தான் 'நடிப்பு ராட்சசி' என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிரூபித்து வருகிறார்.

ஆர். ஜே. பாலாஜியின் குரல், கதாபாத்திரத்திற்கும், கதாபாத்திரத்தின் உணர்ச்சி நிலைக்கும் ஏற்றவாறு மாறுதல் அடையாமல், ஐபிஎல்லில் அவர் கிரிக்கெட்டை வர்ணனை செய்வது போல், மாடுலேசனை மற்றும் மாற்றிக்கொண்டு பேசியிருப்பது அவருடைய கதாபாத்திரத்தை பார்வையாளர்களுடன் ஒன்றைச் செய்யாமல் தனித்து விடப் படுகிறது.

கதைக்கான விடயம் விவாதத்தை ஏற்படுத்தினாலும், அது வலிமையானதாகவும், பார்வையாளனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பயனுள்ளதாகவும் இருக்குமா? என்பது ஐயம் தான்.

இருப்பினும் நம்பிக்கை இருந்தால் எந்த வயதிலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற விடயத்தை ஊர்வசி கதாபாத்திரம் மூலம் பார்வையாளர்களிடத்தில் குறிப்பாக பெண்களிடத்தில் விதைக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கு உளரீதியாக நம்பிக்கை ஏற்படக்கூடும். பிரசவ காலகட்டத்தில் எபிடியூரல் எனும் வலி நிவாரணி மருந்தை எடுத்துக் கொள்வது தொடர்பான சில பெண்களிடம் இருக்கும் மூட நம்பிக்கையை ஊர்வசி கதாபாத்திரம் மூலம் தகர்த்திருப்பதையும் பாராட்டலாம்.

நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பும், தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் சம அளவில் இருப்பதால், பட மாளிகைக்குச் சென்று ஒருமுறை ரசித்துவிட்டு 'வீட்டில் விசேஷம்' என கொண்டாடலாம்.

தயாரிப்பு : பே பியூ பிராஜக்ட்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ்

தயாரிப்பாளர்கள் : போனி கபூர் & ராகுல்

நடிகர்கள் : சத்யராஜ், ஊர்வசி, ஆர் .ஜே. பாலாஜி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர்.

கரு : ஐம்பது வயதிற்கு மேற்பட்ட குடும்பத்தலைவி ஒருவர் கருத்தரிப்பது..

கதை: புகையிரத துறை ஊழியராக பணியாற்றி விரைவில் ஓய்வுபெறும் வயதிலுள்ள சத்யராஜ் மீண்டும் தந்தை ஆவது.

வீட்டில் விசேஷம்- உப்பு குறைவான தலைவாழை விருந்து.

மதிப்பெண் : 2.5 / 5.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35