நுவரெலியா பிரதேச சபையின் தலைவருக்கு எதிராக இதொகா ஒழுக்காற்று விசாரணை நிறைவு - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

Published By: Digital Desk 3

16 Jun, 2022 | 04:20 PM
image

நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை இன்று (16) இடம்பெற்றதுடன், இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை அவருக்கு உத்தியோகபூர்வ கடிதம் மூலமாக அறிவிக்கப்படவுள்ளது. 

இதேவேளை, விசாரணைகளையடுத்து  வேலு யோகராஜ் தமது இ.தொ.கா உபதலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

வேலு யோகராஜுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்  குறித்து விசாரிக்க  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  ஒழுக்காற்று நடவடிக்கைக்குழு  அதன் தலைமையகமான சௌமிய பவனில்  இன்று வியாழக்கிழமை கூடியது. 

நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட கந்தப்பளை நகரில் நுவரெலியா பிரதேச சபைக்கு அரசாங்கம் வழங்கிய  காணி  தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட  ஆவணங்கள் இன்று முழுமையாக ஆராயப்பட்டு, வேலு யோகராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

எதிர்வரும் திங்கட் கிழமை இவ்விசாரணையின்  முடிவுகள் வேலு யோகராஜுக்கு உத்தியோகபூர்வமாக  கடிதம் மூலம் அறிவிக்கப்படவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04