பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ 70 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கொழும்பு நீதவான்  நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

றக்பி போட்டியொன்ருக்கு ஊக்குவிப்பு தொகையாக  70 மில்லியன் ரூபாவினை தனியார் நிறுவனத்தினூடாக செலுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணையே நிறைவடைந்துள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளர்.

இந்நிலையில் குறித்த விசாரணை அறிக்கை  அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இதன் போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 30 திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.