நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வெற்றிகொண்ட இங்கிலாந்து தொடரை தன்வசப்படுத்தியது

Published By: Vishnu

15 Jun, 2022 | 06:48 PM
image

(என்.வீ.ஏ.)

நொட்டிங்ஹாம், ட்ரென்ட் ப்றிஜ் விளையாட்டரங்கில் கணிசமான மொத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தை 5 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது.

Jonny Bairstow celebrates after scoring a 77-ball hundred, England vs New Zealand, 2nd Test, Nottingham, 5th day, June 14, 2022

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து, தொடரை இப்போதைக்கு 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தனதாக்கிக்கொண்டுள்ளது.

Ben Foakes hugs Ben Stokes after the latter hit the winning runs, England vs New Zealand, 2nd Test, Nottingham, 5th day, June 14, 2022

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் ஓட்டங்களைப் பெரும் சிரமத்திற்கு மத்தியில் பெற்ற போதிலும் அப் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்களால் வெற்றி பெற்றிருந்தது.

முதலாவது போட்டியில் நான்கு இன்னிங்ஸ்களிலும் 2 சதங்கள் உட்பட 35 விக்கெட்களுக்கு மொத்தமாக 837 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்தது.

இரண்டாவது போட்டியில் நான்கு இன்னிங்ஸ்களிலும் 5 சதங்கள் உட்பட 35 விக்கெட்களுக்கு மொத்தமாக 1675 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து முதலாவது இன்னிங்ஸில் 553 ஓட்டங்களைக் குவித்தது.

டெரில் மிச்செல், டொம் ப்ளண்டல் ஆகிய இருவரும் அபார சதங்களைக் குவித்ததுடன் 5ஆவது விக்கெட்டில் 236 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்தனர். 6ஆவது விக்கெட்டில் மைக்கல் ப்றேஸ்வெல்லுடன் மேலும் 91 ஓட்டங்களை டெரில் மிச்செல் பகிர்ந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்தும் முதல் இன்னிங்ஸில் திறமையாக துடுப்பெடுத்தாடி 539 ஓட்டங்களைப் பெற்றது.

ஒலி போப், ஜோ ரூட் ஆகிய இருவரும் அபாரமாக துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன் 3ஆவது விக்கெட்டில் 187 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பென் போக்ஸுடன் 6ஆவது விக்கெட்டில் மேலும் 111 ஓட்டங்களை ஜோ ரூட் பகிர்ந்தார்.

எவ்வாறாயினும் இங்கிலாந்து அதன் கடைசி 5 விக்கெட்களை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது,

முதல் மூன்று தினங்களில் 1026 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்துடன் முதல் இன்னிங்ஸ் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது. இதன் காரணமாக இந்த டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடைசி இரண்டு தினங்களில் மொத்தமாக 549 ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில் வெற்றியை இங்கிலாந்து தனதாக்கிக்கொண்டது.

நியூஸிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 284 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

போட்டியின் கடைசி நாளான நேற்று பகல்போசன இடைவேளைக்கு சற்று முன்னர் 299 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 5 விக்கெட்களை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஜொனி பெயார்ஸ்டோவ் குவித்த சதமும் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் அடித்த அரைச் சதமும் இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தன. அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 179 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.

எண்ணிக்கை சுருக்கம்

நியூஸிலாந்து 1ஆவது இன்: 553 (டெரில் மிச்செல் 190, டொம் ப்ளன்டல் 106, மைக்கல் ப்றேஸ்வெல் 49, வில் யங் 47, டெவன் கொன்வே 46, ஜேம்ஸ் அண்டர்சன் 62 - 3 விக்., பென் ஸ்டோக்ஸ் 85 - 2 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: 539 (ஜோ ரூட் 176, ஒலி போப் 145, அலெக்ஸ் லீஸ் 67, பென் போக்ஸ் 56, பென் ஸ்டோக்ஸ் 46, ட்ரென்ட் போல்ட் 106 - 5 விக்., மைக்கல் ப்றேஸ்வெல் 62 - 3 விக்.)

நியூஸிலாந்து 2ஆவது இன்: 284 (டெரில் மிச்செல் 62, வில் யங் 56, டெவன் கொன்வே 52, ஸ்டுவர்ட் ப்றோட் 70 - 3 விக்., ஜேம்ஸ் அண்டர்சன் 20 - 2, மெத்யூ பொட்ஸ் 32 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: (ஜொனி பெயார்ஸ்டோவ் 136, பென் ஸ்டோக்ஸ் 75 ஆ. இ.), அலெக்ஸ் லீஸ் 44, ட்ரென்ட் போல்ட் 94 - 3 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31