50 நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் கப்பலுக்கு நாளொன்றுக்கு 18,000 டொலர்களை செலுத்த வேண்டிய நிலை

Published By: Digital Desk 5

15 Jun, 2022 | 07:04 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

40,000 மெற்றிக் தொன் உராய்வு எண்ணெய்யை  ஏற்றிக் கொண்டு  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல் (15) இன்றுடன்  50  நாட்களாக தரித்து நிற்கிறது. 

குறித்த எரிபொருள் தாங்கி கப்பல் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்த போதிலும்,  டொலர் பற்றாக்குறை காரணமாக துறைமுகத்திலிருந்து  கப்பலை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

இந்நிலையில், அக்கப்பலை நங்கூரமிடுவதற்கு தாமதக் கட்டணமாக நாளொன்றுக்கு 18,000 டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும்,  எரிபொருள் தாங்கி விடுவிக்கப்பட்டிருந்தால், நாட்டிலுள்ள 6 மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியும் எனவும்  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திள் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த முடிவை எடுக்கத் தவறியதால், போக்குவரத்துக்காக ஒதுக்கப்பட்ட 1500 மெற்றிரிக் தொன் டீசலை , யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக தற்போது நாட்டில் டீசலை பெற்றுக்கொள்வதற்காக வாகன சாரதிகள் இரவு பகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31