இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மீதான அமெரிக்காவின் அக்கறையே பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் - அமெரிக்கத்தூதுவர் 

14 Jun, 2022 | 07:41 PM
image

(நா.தனுஜா)

அமெரிக்க விவசாயத்திணைக்களத்தின் முன்னேற்றத்திற்கான உணவு முயற்சியில் பங்குபெறும் இலங்கை பால் பண்ணையாளர்களின் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக்கொண்டு 27 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன.

 இச்செய்திட்டம் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், இதனூடாகப் பால் உற்பத்தி சராசரியாக 68 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டதன் மூலம் சுமார் 25,000 பால் பண்ணையாளர்கள் பயனடைந்திருக்கின்றார்கள்.

 அதுமாத்திரமன்றி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உணவுப்பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்யும் முயற்சிக்கான அமெரிக்க ஒத்துழைப்பின் ஓரங்கமான இச்செயற்திட்டம் மூலம் சுமார் 80,000 இலங்கையர்கள் பயனடைவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 இவ்வாறானதொரு பின்னணியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தாமதப்படுத்தப்பட்டுவந்த இவ்வொப்பந்தம் நேற்று அமெரிக்கத்தூதரகத்திற்கும் இலங்கை விவசாயத்திணைக்களத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

'இந்த 27 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கல், இலங்கையின் நிலையான பொருளாதார அபிவிருத்தியை உறுதிசெய்வதில் அமெரிக்கா கொண்டிருக்கும் அர்ப்பணிப்பான கடப்பாட்டிற்கு ஓர் உதாரணமேயாகும். 

இச்செயற்திட்டம் பால் உற்பத்தித்துறையை மேம்படுத்துவதுடன் மாத்திரமன்றி, இத்துறையில் வளர்ச்சியடைவதற்கு அவசியமான வளங்கள் பால் பண்ணையாளர்களுக்கு வழங்கப்படும்' என்று இப்புரிந்துணர்வு ஒப்பந்தக் கைச்சாத்திடல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32