நாட்டைக் கட்டியெழுப்ப வலுவான, நிலைபேறான சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் - சஜித் பிரேமதாஸ

Published By: Vishnu

13 Jun, 2022 | 09:15 PM
image

(செய்திப்பிரிவு)

பொருளாதார வீழ்ச்சிக்கு அரசியல் காரணிகள் பங்களித்துள்ளன எனவும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வலுவான மற்றும் நிலைபேறான சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

முழு உரிமமாக ஒரு குடும்பம் நாட்டை எழுதி எடுத்துக் கொண்டு முழு நாட்டையும் கொள்ளையடித்துள்ளது. இரண்டு வருடங்களாக நாடு ராஜபக்ஸவாதத்தையும் குடும்பவாதத்தையுமே பின்பற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நவீனத்துவ ஒரு இலங்கையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோருக்கிடையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 13 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம் முன்வைத்த முன்மொழிவுகளில் பெரும்பாலான முன்மொழிவுகளுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் இணங்குவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த கருத்தாடலை பரவலாக முன்னெடுக்கும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் செயலக அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதற்கும் அதற்குத் தேவையான வளங்களை பெற்றுக் கொடுப்பதற்கும் இணக்கம் தெரிவித்தார்.

இணக்கப்பாட்டின் மூலம் நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும். அதைவிடுத்து நாட்டைக் கட்டியெழுப்ப வழியே இல்லை எனவும் தெரிவித்தார். தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு அரசியல் காரணிகள் பங்களித்துள்ளன எனவும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வலுவான மற்றும் நிலைபேறான சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்த அவர் , இனவாதம், பொறுப்பற்றவாதம், தீவிரவாதம், வர்க்கவாதம், மதவாதம் என்பன ஒழிக்கப்பட வேண்டும் எனவும், முற்போக்கான அறிவொளிப் பயணத்தைத் தொடங்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பிற்போக்குத்தனமான சிந்தனைகளை விடுத்து, அறிவார்ந்த சிந்தனைகளை அணிகலனாகக் கொண்டு செயற்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்று இந்நாட்டை இத்தகைய பாதாளத்தில் தள்ளிவிட்டது சர்வாதிகாரவாதமே எனவும் தெரிவித்தார். அரசாங்கத்தினால் கடந்த இரண்டரை வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட தோல்வியடைந்த ஆட்சியினால் 225 பேரும் வேண்டாம் என்ற கருத்தோட்டம் உருவாகியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஆனால் அது முற்றிலும் அவ்வாறே அமைந்து விடாது எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58