ஜனாதிபதி 21 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பார் - பிரதமர் ரணில் நம்பிக்கை

Published By: Vishnu

13 Jun, 2022 | 09:14 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சாதகமாகவே உள்ளது. அது அவருக்கு பாதகமானதாக இல்லை.

எனவே அவர் அதனை ஆதரிப்பார் என்று நம்புகின்றேன். அத்தோடு அவர் நிறைவேற்றதிகாரங்களை குறைத்துக் கொள்வதற்கு தயார் என்று மக்களுக்கு உறுதியளித்துள்ளார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

'வியோன்' என்ற சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசியலமைப்பின் உத்தேச 21 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்று நான் ஊகிக்கின்றேன்.

21 ஆவது திருத்தம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்ட போது அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு தான் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி மக்களுக்கு உறுதியளித்துள்ளார். அத்தோடு தற்போது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தம் இன்னும் அவருக்கு சாதகமாகவே உள்ளது, பாதகமாக இல்லை.

முன்னதாக 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன. எனினும் அமைச்சரவையில் தற்போது முன்வைக்கப்பட்ட வரைபுக்கு பாரிய பாதகமான எதிர்ப்புக்கள் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை.

இந்த வரைவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் என்னைச் சந்தித்திருந்தனர்.

ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்திருந்தனர். ஆனால் அந்த வரைவு அதே நாளில் அமைச்சரவையிலும் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த வாரம் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்ற கடைசி நேரத்திலேயே குறித்த ஆவணம் அமைச்சர்களிடம் கையளிக்கப்பட்டது.

எனவே அது தொடர்பில் அன்றைய தினம் விரிவாகக் கலந்துரையாடப்படவில்லை. இது தொடர்பில் ஆராய்வதற்கு  அமைச்சர்கள் மேலதிக கால அவகாசம் கோரியுள்ளனர். 21 ஆவது திருத்தச் சட்டமூலம் இன்று (நேற்று) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று நான் நம்புகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31