'புத்தகங்கள் எமது அரிய நண்பர்கள்" : செங்கலடியில் விழிப்புணர்வு ஊர்வலம்

Published By: MD.Lucias

31 Oct, 2016 | 10:50 AM
image

மாணவர்களிடையே வாசிப்பு அறிவைப் பெருக்கும் முயற்சியாக தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபை செங்கலடி பொது வாசிகசாலையின் நூலகர் தவராசா சிவராணி தெரிவித்தார்.

தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாளான இன்று கரடியனாறு மகாவித்தியாலய மாணவர்களின் தெரு நாடகத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின.

மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர்-செங்கலடி எல்லையிலிருந்து ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலம் செங்கலடி பொதுச் சந்தையில் முடிவடைந்தது.

தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும், சிறந்த நூலகங்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையினால் நிருவகிக்கப்படும் செங்கலடி பொது வாசிகசாலை, ஆறுமுகத்தான்குடியிருப்பு மற்றும் ஐயங்கேணி நூலகம் ஆகியவை சிறந்த வாசிகசாலைகளாகத் தெரிவு செய்யப்பட்டு பரிசுகளைப் பெற்றன.

வாசிப்புப் பழக்கம் அருகி வருகின்ற இக்காலகட்டத்தில் வாசிப்புப் பழக்கத்தை மாணவர்கள் எவ்வழியிலாவது கைக்கொண்டு ஆக்கபூர்வ அறிவைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதால் இத்தகைய வீதி நாடகமும் விழிப்புணர்வும் செய்யப்பட வேண்டிய தேவை உணரப்பட்டதாகவும் சிவராணி தெரிவித்தார்.

ஊர்வலத்தில் நூலகர்கள், கரடியனாறு மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும்; பிரதேச செயலகம் உள்ளுராட்சி மன்ற அதிகாரிகளும் பங்குபற்றினர்.

-அப்துல் கையூம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22