பிரபாகரன் படை பெயரில் வடக்கில் தமிழ் பொலிஸாருக்கு அச்சுறுத்தல்

Published By: Raam

31 Oct, 2016 | 10:44 AM
image

வட பிராந்­தி­யத்தில் கட­மை­யாற்றும் அனைத்து தமிழ் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் 21 நாட்­க­ளுக்குள் கட­மை­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­ளு­மாறு அல்­லது வேறு பகு­தி­க­ளுக்கு இட­மாற்றம் பெற்றுச் செல்­லு­மாறு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த காலக்­கெ­டுக்குள் தமது நிபந்­த­னையை ஏற்று வில­காத அல்­லது இட­மாற்றம் பெறாத தமிழ் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் கடு­மை­யான எதிர்­வி­ளை­வு­களை சந்­திக்க நேரிடும் பிர­பா­கரன் படை எனும் அமைப்பு அனா­ம­தேய அறி­வித்தல் ஒன்றின் ஊடாக எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

யாழ்ப்­பாணம் முல்­லை­தீவு, கிளி­நொச்சி, வவு­னியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்­டங்­களின் சிரேஷ்ட பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கே இந்த அறி­வித்தல் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

 குறித்த அறி­வித்­தலில் அண்­மையில் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூடு மற்றும் விபத்தில் கொல்­லப்­பட்ட இரு யாழ். பல்­கலை மாண­வர்கள் தொடர்பில் நியாயம் கிடைக்கும் வரை இவ்­வாறு பணி­யி­லி­ருந்து வில­கி­யி­ருக்க தமிழ் பொலிஸார் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

 அதன்­படி வட­மா­கா­ணத்தின் பொலிஸ் அலு­வ­ல­கங்கள் மற்றும் பொலிஸ் நிலை­யங்கள் அனைத்­திலும் கட­மை­யாற்றும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் இந்த எச்­ச­ரிக்கை பொது­வாக விடப்ப்ட்­டுள்­ளது.

இந்த 21 நாள் காலக்­கெடு நேற்­றி­லி­ருந்து ஆரம்­ப­மா­வ­தாக சிரேஷ்ட பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பட்­டுள்ள அக்­க­டி­தத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் சிரேஷ்ட பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு கிடைத்­துள்ள மேற்­படி கடிதம் தொடர்பில் விரி­வான விசா­ரணை   பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் உத்­த­ர­வுக்கு அமைய உடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் குமாரவின் நேரடி கட்டுப்படடில் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18