சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை பெற வருட இறுதிவரை காத்திருக்க வேண்டிவரும் - ஹர்ஷ டி சில்வா

Published By: Vishnu

13 Jun, 2022 | 08:49 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கை கடன் உதவி பெறுவதற்கு இந்த வருட இறுதிவரை காத்திருக்கவேண்டி வரும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் நாடு எதிர்கொண்டு பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரி இருக்கும் கடன் தொகை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம் கடன் உதவி கோரி இருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவிகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியாது அதற்கு பல முறைமைகள் காணப்படுகின்றன.

என்றாலும் தற்போது அரசாங்கம் கோரி இருக்கும் கடன் உதவியை பெற்றுக்கொள்ள இந்த வருடம் இறுதிவரை எதிர்பார்க்கவேண்டி வரும். அதற்கு முன்னர் எமக்கு பணம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.

சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம் முன்வைத்திருக்கும் கடன் உதவி கோரிக்கைக்கு அமைய ஓரிரு நாட்களில் அவர்களின் ஊழியர் தரத்திலான குழுவொன்று கலந்துரையாட இங்கு வருவார்கள் .

கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டாலும், கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் அவர்கள்  ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவார்கள். அது சிலவேளை மேலும்  ஒருமாதமாகும் போது இடம்பெறலாம். என்றாலும் அந்த ஒப்பந்தம் மூலம்.பணம் பெற்றுக்கொள்ள முடியாது.

ஏனெனில் பணம் பெற்றுக்கொள்ள சர்வதேச நாணய நிதிய நிர்வாகத்தின் அனுமதி பெறப்படவேண்டும். அதனை செய்ய பல விடயங்களை நாங்கள் செய்யவேண்டி வரும். 

அதாவது, அரச நிதி முகாமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டி வரும். வெளிப்படையாக சொல்வதாக இருந்தால்  அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டிவரும்.

செலவுகளை குறைத்துக்கொள்ளவேண்டிவரும், அதேபோன்று நிவாரணங்கள் தொடர்பில் சிந்திக்கவேண்டி வரும். இவற்றை விட, கடன் செலுத்த இருப்பவற்றை மறுசீரமைப்பு செய்யும் சிறந்த வேலைத்திட்டத்துக்கு செல்ல வேண்டிவரும் இது இலகுவான விடயமல்ல.

அத்துடன் 1990 நடுப்பகுதியில் இருந்து நாட்டை நிர்வகித்த, ஜனாதிபதிகளாக இருந்தவர்களின் சிந்தனை, நிலைப்பாடு தவறான திசைக்கே பயணித்தது.

எமக்கு பின்னால் இருந்த பங்களாதேஷ், வியட்நாம். பேன்ற நாடுகள் உலக நாடுகளுடன் இணைந்து, ஏற்றுமதிகளை அதிகரிக்கும்போது, நாங்கள் பாரியளவில் வரியை  அதிகரித்துக்கொண்டு, உலக நாடுகளுடன் இணைந்து செயற்பட இருந்த சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கிக்கொண்டு,  உலக நாடுகளில் இருந்து ஒதுக்கப்பட்டோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11