பலம் மிக்க நாடுகளுக்கு இரையாகவே இலங்கை உள்ளது என்பதற்கு மின்சாரசபை தலைவரின் கருத்து தக்க சான்று : நளின் பண்டார

Published By: Vishnu

12 Jun, 2022 | 06:54 PM
image

(எம்.மனோசித்ரா)

நல்லாட்சிக்கு முற்பட்ட ஆட்சி காலத்தில் மின்சக்தி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியுள்ள தற்போதைய மின்சாரசபை தலைவர் எம்.சி.சி. பெர்னாண்டோ தெரிவித்துள்ள கருத்து பாரதூரமானதாகும். உலகில் பலம் மிக்க நாடுகளுக்கு இரையாகவே இலங்கை உள்ளது என்பதற்கு இதுவொரு தக்க சான்றாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எம்.சி.சி. பெர்னாண்டோ 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் மின்சக்தி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.

எனவே எம்.சி.சி.பெர்னாண்டோ என்பவர் விளையாட்டுப் பொருள் அல்ல. நுரைச்சோலை மின் உற்கத்தி நிலைய ஒப்பந்தம் கையெழுத்திடும் போதும் இவரே மின்சக்த அமைச்சின் செயலாளராக செயற்பட்டார்.

நுரைச்சோலை மின் உற்கத்தி நிலைய ஒப்பந்தம் கையெழுத்திடும் போதும் 23 மில்லியன் டொலர் மோசடி தொடர்பில் பிரபலமாக பேசப்பட்டது.

எனவே இவர் சிறு குழந்தை அல்ல. மன்னார் மின்உற்பத்தி நிலையம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழுத்தம் பிரயோகித்ததாக இவர் கோப் குழுவில் தெரிவித்தார்.

இவரால் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த கருத்து மிகவும் பாரதூரமானதாகும். இவரால் தெரிவிக்கப்பட்ட இந்த கருத்தினால் இலங்கையில் மாத்திரமின்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சகலரும் கலவரமடைந்தனர்.

அதனையடுத்தே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டர் பதிவொன்றை இட்டு இதனை நிராகரித்தார்.

எனினும் பின்னர் தனக்கு காணப்பட்ட பதற்ற நிலைமையால் இவ்வாறு தெரிவித்ததாகக் கூறி , தான் தெரிவித்த கருத்தினை வாபஸ் பெற்றுள்ளார்.

இந்த வசனம் தவறுதலாக வெளிவந்ததல்ல. இவரால் இவ்வாறானதொரு கருத்து வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னைய தினத்தில் பாராளுமன்றத்தில் மின்சாரசட்ட திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் காரணம் இந்த காரணிளாலேயே ஆகும்.

மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியை மேம்படுத்துவதற்கு நாம் எதிரானவர்கள் அல்ல. எனினும் இதனைக் காண்பித்து மின்உற்பத்தி கட்டமைப்பை தமது சகாக்களுக்கு வழங்குவதற்கும் , சர்வதேசத்திற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளையே நாம் எதிர்க்கின்றோம். உலக பலவந்த நாடுகளின் இரையாகியுள்ளது என்று கூறுவதற்கு புதிய சாட்சிகள் தேவையில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22