இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் ஆயுர்வேத மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யுமாறு கோரிக்கை

Published By: Vishnu

12 Jun, 2022 | 06:50 PM
image

(எம்.மனோசித்ரா)

டொலர் நெருக்கடியின் காரணமாக இறக்குமதித் துறையில் ஏற்பட்டள்ள பாதிப்பானது ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் தாக்கம் செலுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அரச ஆயூர்வேத வைத்தியர் சங்கம், இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் ஆயுர்வேத மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறையில் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவின் தலைவர் ருவான் விஜேவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அந்த சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஆயுர்வேத மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நிதி நெருக்கடி நிலைமை காரணமாக 237 உலர் மருந்துகள் மற்றும் ஏனைய 136 வகையான மருந்துகளை உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரச ஆயூர்வேத வைத்தியர் சங்கம் இதன் போது சுட்டிக்காட்டியது.

டொலர் நெருக்கடி மற்றும் விநியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்தாமை உள்ளிட்ட காரணிகளாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாவும் அச்சங்கம் தெரிவித்தது.

இதனால் நாடளாவிய ரீதியிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களில் பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான மருந்து தட்டுப்பாடுகளை எதிர்கொள்வதற்கு உள்நாட்டு மருந்து உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்று வைத்தியர்கள் இதன் போது வலியுறுத்தினர்.

 சுற்றுலாப்பயணிகளை இலக்காகக் கொண்ட ஆயுர்வேத சிகிச்சை முறைமைகள் தொடர்பில் ஜேர்மன், அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாட்டு பிரஜைகள் ஆர்வம் செலுத்துகின்றனர். அதற்காக வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறும் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சுதேச ஆயுர்வேத மருத்துவத் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து தேசியக் கொள்கையை வகுக்க பிரதமர் அலுவலகத்தில் மத்திய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் , சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு கொழும்பில் ஆயுர்வேத வைத்தியசாலைகளை நிறுவுமாறும் ஆயுர்வேத வைத்தியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆயுர்வேத மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களை இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்து தர நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அரச வைத்தியசாலைகளிலும் ஆயர்வேத மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் , வருடத்தின் முதற்காலாண்டு நிறைவடைந்துள்ள போதிலும் , இன்னும் அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.

இதனால் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு , தேசிய மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலைகளும் நூற்றுக்கு நூறு சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இதன் போது வெளிப்படுத்தப்பட்டது.

உலக சுகாதார ஸ்தாபனத்தில் உள்ளுர் மருந்தகத் துறை காணப்படுவதாகவும் , இதன் மூலம் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆயுர்வேத வைத்திய சங்கம் சுட்டிக்காட்டியுள்ள உண்மைகள் முழுமையான அறிக்கையாக தயாரிக்கப்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என சுகாதார குழுவின் தலைவர் ருவன் விஜேவர்தன இதன் போது தெரிவித்தார்.

அத்தோடு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் கலந்துரையாடி சுற்றுலாப்பயணிகளை ஆயுர்வேத சிகிச்சை நோக்கி ஈர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் ஆயுர்வேத மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையுடன் இந்திய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28