பா.ஜ.க.வுக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பு

Published By: Digital Desk 5

12 Jun, 2022 | 03:48 PM
image

லத்தீப் பாரூக்

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய மட்ட உத்தியோகப்பூர்வ பேச்சாளர் நுபுரா ஷர்மா, மற்றும் புதுடில்லி ஊடகப் பிரிவு தலைவர் நவீன் குமார் ஜின்தால் ஆகியோர் இஸ்லாத்தின் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை நிந்தனை செய்யும் வகையில் தெரிவித்துள்ள கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் கண்டனத்துக்கு உள்ளகியுள்ளன.

இதனையடுத்து நுபுரா ஷர்மா கட்சியின் அங்கத்துவ உரிமையில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க.வின் டில்லி தலைவர் அதேஷ் குப்தா அறிவித்துள்ளார். அதேபோல் நவீன் குமார் ஜன்தாலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் ஷர்மா மன்னிப்புக் கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது கூற்றை எந்த நிபந்தனையும் இன்றி வாபஸ் பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். யாருடைய சமய உணர்வுகளையும் காயப்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்தின் காரணமாக உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் வன்முறைகள் வெடித்ததை அடுத்தே அவர் இந்த மன்னிப்புக் கோரல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த வன்முறையில் 40க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். 1500க்கும் அதிகமானவர்கள் மீது வன்முறையோடு தொடர்புள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் ஷர்மாவுக்கு எதிராக பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளும் குவிந்துள்ளன.இந்த சம்பவம் வளைகுடா நாடுகளில் பெரும் பிரதிபலிப்பை ஏற்படுத்தி உள்ளன. குவைத், கட்டார், ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியத் தூதுவர்கள் அந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் கண்டன அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன. 

ஐக்கிய அரபு அமீரகம், ஒமான், இந்தோனேஷியா, ஈராக், மாலைதீவு, ஜோர்தான், லிபியா மற்றும் பஹ்ரேன் ஆகிய நாடுகளும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளன. சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு பா.ஜ.க. பேச்சாளரின் கருத்தை மிக வனமையாகக் கண்டித்துள்ளது. 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு மற்றும் பாகிஸ்தான் என்பனவும் இந்தியாவை வன்மையாகக் கண்டித்துள்ளன.

இந்தியா பொது மன்னிப்புக் கோர வேண்டும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாக கட்டார் அறிவித்துள்ளது. “எந்தத் தண்டனையும் இன்றி இவ்வாறான இஸ்லாமோபோபியா கருத்துக்கள் தொடர அனுமதிப்பது மனித உரிமைகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். மேலும் பல பாரபட்சங்களுக்கும் ஓரம் கட்டலுக்கும் இது வழியமைக்கும். அது வெறுப்பையும் வன்முறையையும் மேலும் அதிகரிக்கும்” என்று கட்டார் வெளியுறவு அமைச்சு அறிவித்தள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள கருத்தில் “ராஷ்ட்ரிய சுயம்சேவாக்சங், இந்தியாவை பெரும் இக்கட்டானதோர் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறுப்புணர்வைத் தூண்டுபவர்களுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தையும் இது ஏற்படுத்தி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

விகாஸ் பாண்டே என்ற பத்தி எழுத்தாளர் தனது கட்டுரையில் “ஷர்மா மற்றும் ஜிண்தாலின் கருத்துக்கள் கடந்த சில வருடங்களாக இந்த நாடு கண்டு வரும் சமய ரீதியான துருவமுனைப்பை பிரதி பலிக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களும் தாக்குதல்களும் 2014இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல் கணிசமாக அதிகரித்துள்ள”  என்று எழுதி உள்ளார்.

குவைத், கட்டார், சவூதி அரேபியா, பஹ்ரேன், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என்பனவற்றை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு சபையுடனான இந்தியாவின் வர்த்தகம் 2020-2021 காலப்பகுதியில் 87பில்லியன் டொலர்களாகக் காணப்படுகின்றது. மில்லியன் கணக்கான இந்தியர்கள் இங்கு தொழில் புரிகிறார்கள். இவர்கள் மூலமும் இந்தியாவுக்கு பெருந்தொகையான டொலர்கள் அனுப்பப்படுகின்றன. இந்தியா தனது சக்தி வளத்தேவை இறக்குமதிக்கும் பிரதானமாக இந்தப் பிராந்தியத்திலேயே தங்கி உள்ளது.

2014இல் பதவிக்கு வந்தது முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பிராந்தியத்துக்கு அடிக்கடி விஜயம் செய்யும் நபராகவும் இருந்து வருகின்றார். ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா ஏற்கனவே சுதந்திர வர்த்தக உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுள்ளது. பரவலான வர்த்தகத் தொடர்புகளுக்காக ஜி.சி.சி. உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 2018இல் அபுதாபியில் இந்து கோவில் திறந்து வைக்கப்பட்ட வரலாற்று முக்கிய நிகழ்வில் மோடி கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பின்னணியில் இந்தியாவுக்கு எதிரான அலையில் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகக் காணப்படுகின்றது. அமீரகத்துடனும் ஏனைய சில முஸ்லிம் நாடுகளுடனும் இந்தியா அண்மைக் காலங்களில் ஏற்படுத்திக் கொண்ட வெற்றிகரமான ராஜதந்திர உறவுகளும்; தற்போது கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளன. 

ஈரானுடனான டில்லியின் உறவுகள் கடந்த காலங்களில் மந்த நிலையில் இருந்தாலும், ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹ் ஹையானின் புதுடில்லி விஜயம் அதில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்தியாவை வந்தடைந்துள்ளார். 

இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடுகள் உற்பட ஏனைய வெளிநாட்டுத் தலைநகரங்களில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் விமர்சிக்கப்படுகின்ற போது இந்தியா எப்போதும் தனது நிலைப்பாட்டை சாதகமாக்கியே கருத்துக்களை முன்வைத்து வந்துள்ளது. ஆனால் இந்த விடயத்தில் இந்திய ராஜதந்திரிகள் துரிதமாகச் செயற்பட்டு பதற்றத்தை தணிக்கும் வகையில் மன்னிப்புக்களை வெளியிட்டுள்ளதோடு சேதங்களை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் விரைவாக செயற்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது என்று வில்ஸன் சென்டர் என்ற சிந்தனா வட்டத்தின் ஆசிய திட்டத்துக்கான பிரதிப் பணிப்பாளர் மைக்கல் குகெல்மன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சர்ச்சை பற்றி சர்வதேச சமூகம் கொதிப்படைந்தமை இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும் என்பதே ஆய்வாளாகளின் கருத்தாக உள்ளது. பிரிவினைவாத அரசியல், சர்வதேச மட்டத்தில் தாக்கத்தை விளைவிக்கக் கூடியது என்ற பாடத்தை இந்தியா இனியாவது கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டில் விஷமத்தனமான அரசியல் அதிகரிக்கின்ற போது இந்தயாவுக்குள் நடப்பது, இந்தியாவில் மட்டும் தங்கி விடுவதில்லை என்ற பாடத்ரைத இந்தியா தற்போது கற்று வருகின்றது. இந்தியாவின் சர்வதேசத் தொடர்புகள், பொருளாதார மற்றும் இராஜதந்திர பங்குடைமைகள் விரிவடைந்தும் வலுவடைந்தும் வருகின்ற நிலையில் இந்தப் பாடம் இந்தியாவுக்கு மிகவும் அவசியமானது. உள்ளுர் அரசியல் செயற்பாடுகள், இந்தியா சம்பந்தமாக சர்வதேச அரங்கில் மகிழ்ச்சி அற்ற நிலையை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என மைக்கல் குகெல்மன் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடந்த ஏப்பிரல் மாதம் அல்ஜஸீரா வெளியிட்ட அறிக்கையில் சர்வதேச சமய சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்துக்கொள்ள வேண்டுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04