மே 9 தாக்குதல்களின் பின்னணியில் பௌத்த மதகுருமார்கள் உள்ளனர் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

Published By: Vishnu

12 Jun, 2022 | 02:24 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஆளும் தரப்பு அரசியல்வாதிகளை இலக்காகக் கொண்டு மே 09 ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் பின்னணியில் ஒரு சில பௌத்த குருமார்கள் உள்ளார்கள் என குறிப்பிட்ட கருத்தில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது.

எனது கருத்திற்கு கண்டனம் வெளியிடுவதை விடுத்து முடிந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கடந்த மாதம் 09ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களினால் தீக்கிரையான தனது வீட்டை 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொந்த இடங்களுக்கு செல்லும் போது மக்கள் அவர்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பௌத்த மதகுருமார்கள் குறிப்பிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.இவ்வாறான கருத்து அரசியல்வாதிகளுக்கு எதிராக விடுக்கும் அச்சுறுத்தலாகவே கருதப்படும்.

மே மாதம் 09ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளை இலக்காகக் கொண்டு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன.

தெரிவு செய்யப்பட்ட வகையில் அரசியல்வாதிகள் தீக்கிரையாக்கப்பட்டன.இந்த சம்பவத்தின் பின்னணியில் பௌத்த மதகுருமார்கள் உள்ளார்கள் என்பதை பாராளுமன்றில் குறிப்பிட்டேன்.

பாராளுமன்ற வரப்பிரசாதத்தை பயன்படுத்தி கருத்துரைப்பதாக தற்போது ஒருசில பௌத்த மத தலைவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.தற்போதும் குறிப்பிடுகிறேன்.

மே 09 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் ஒருசில பௌத்த குருமார்கள் உள்ளார்கள் என்பது தொடர்பில் உரிய தரப்பிற்கு சாட்சியமளித்துள்ளேன்.

பாராளுமன்றில் நான் ஆற்றிய உரைக்கு ஒருசில மத தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிடுகின்றனர். அதிருப்தி வெளியிட வேண்டிய அவசியமில்லை முடிந்தால் வழக்கு தாக்கல் செய்யட்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33