இலங்கையின் சுஜான் அற்புத ஆட்டம் ; தாய்லாந்திடம் தோல்வியைத் தழுவியது இலங்கை

Published By: Vishnu

12 Jun, 2022 | 11:53 AM
image

(நெவில் அன்தனி)

உஸ்பெகிஸ்தானின் நாமங்கன், மார்க்ஆஸி விளையாட்டரங்கில் 11 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற தாய்லாந்துடனான சி பிரிவு ஏஎவ்சி ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய இலங்கை, கடும் போட்டிக்குப் பின்னர் 0 - 2 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி அடைந்தது.

இந்த சுற்றுப் போட்டியில் தாய்லாந்து தனது இரண்டாவது வெற்றியை ஈட்டிய அதேவேளை, இலங்கை இரண்டாவது தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து சி குழுவிலிருந்து ஆசிய கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றுக்கு தெரிவாகப் போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டியில் உஸ்பெகிஸ்தானை எதிர்வரும் 14ஆம் திகதி தாய்லாந்து எதிர்த்தாடவுள்ளது.

மாலைதீவுகள் அணிக்கு எதிரான தனது ஆரம்பப் போட்டியில் 3 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய தாய்லாந்து, மேலும் ஒரு வெற்றிக்கு குறிவைத்து இலங்கையை எதிர்கொண்டது.

மறுபுறத்தில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் தோல்வியைத் தழுவிய இலங்கை, சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தாய்லாந்தை சந்தித்தது.

உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் போன்றே தாய்லாந்துடனான போட்டியிலும் இலங்கை அணித் தலைவர் சுஜான் பெரேரா, கோல்காப்புகளுக்கு இடையில் அற்புதமாக செயற்பட்டு தாய்லாந்தின் கோல் போடும் பல முயற்சிகளை தடுத்து நிறுத்தினார்.

போட்டி ஆரம்பித்து 2 நிமிடங்கள் ஆன நிலையில் சராச் யூயென்னின் முயற்சியையும் 4 நிமிடங்கள் கழித்து தீரட்டொன் புன்மாதனின் ப்றீ கிக்கையும் சுஜான் பெரேரா மிகத் திறமையாக செயற்பட்டு தடுத்தார்.

மறுபுறத்தில் இலங்கைக்கு கிடைத்த அரிய வாய்ப்பை டிலொன் டி சில்வா தவறவிட்டமை அணிக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

மத்திய களத்திலிருந்து பரிமாறப்பட்ட பந்தை முன்னோக்கி நகர்த்திச் சென்ற டிலொன் டி சில்வாவுக்கு தாய்லாந்து கோல் காப்பாளரை மாத்திரமே கடந்து சென்று பந்தை கோலினுள் புகுத்த வேண்டியிருந்தது.

ஆனால், அவர் உதைத்த பந்து கோல்காப்புக்கு மேலாக சென்றதால் இலங்கையின் கோல் போடும் வாய்ப்பு தவறிப்போனது.

அதனைத் தொடர்ந்து இலங்கையின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் தாய்லாந்து விளையாடியது. இதன் பலனாக போட்டியின் 34ஆவது நிமிடத்தில் பிட்டிவாட் பரிமாறிய பந்தை திட்டிபான் மிக இலகுவாக கோலினுள் புகுத்தி தாய்லாந்தை 1 - 0 என முன்னிலையில் இட்டார்.

இடைவேளையின் பின்னர் மீண்டும்  போட்டி  தொடர்ந்த சொற்பநேரத்தில் பாதொம்ப்போலின் முயற்சியை சுஜான் பெரேரா வெகு சாமர்த்தியமாக தடுத்து நிறுத்தினார்.

இதேவேளை முதலாவது போட்டியில் போன்றே தடுத்தாடும் வியூகத்துடன் விளையாடிய இலங்கை வீரர்கள் தமது எல்லைக்குள் தாய்லாந்து வீரர்கள் ஊடறுத்துச் செல்வதை தடுத்துக்கொண்டிருந்தனர்.

எவ்வாறாயினும் போட்டி முழு நேரத்தைக் கடந்து உபாதையீடு நேரத்துக்குள் புகுந்த சொற்ப நேரத்தில் தாய்லாந்து 2ஆவது   கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்தது. அந்த சந்தர்ப்பத்தில் சயாவத் பரிமாறிய பந்தை வோராச்சிட் கோலினுள் புகுத்தினார்.

இந்த சுற்றுப் போட்டியில் இரண்டாவது தோல்வியை இலங்கை தழுவய போதிலும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மாலைதீவுகளுடனான கடைசிப் போட்டியில் சாதித்து திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை சி பிரிவில் நடைபெற்ற மற்றைய போட்டியில் மாலைதீவுகளை 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் உஸ்பெகிஸ்தான் இலகுவாக வெற்றிபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58