21 ஐ இறுதிப்படுத்துவது தொடர்பில் இன்று அமைச்சரவையில் அவதானம் - நீதி அமைச்சர் விஜேதாச 

Published By: Vishnu

12 Jun, 2022 | 11:59 AM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை இறுதி செய்வது தொடர்பில் இன்று 13 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு  சீர்திருத்த அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு இரு வாரங்கள் கடந்துள்ளன.

இந்நிலையில் இத் திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும் , பின்னர் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையிலும் கட்சி தலைவர்களுடன் இரு சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

முதலாவது கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளாமை மற்றும் இரண்டாவது கலந்துரையாடலின் போது இது குறித்து ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேலதிக காலத்தினைக் கோரியமை உள்ளிட்ட காரணங்களினால் 21 ஐ இறுதிப்படுத்தும் செயற்பாடுகள் இழுபறி நிலையிலேயே காணப்படுகின்றன.

எவ்வாறிருப்பினும் கடந்த இரு வாரங்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது பெற்றுக் கொள்ளப்பட்ட பரிந்துரைகள் , யோசனைகளை உள்வாங்கி சில மாற்றங்களுடன் 21 ஆவது திருத்தத்தம் அமைச்சரவை அமைச்சர்களிடம் கையளிக்கப்பட்டது.

எனினும் இது அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்காக வழங்கப்படவில்லை என்றும் , கடந்த வாரம் அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஒரு திருத்தங்களுடன் கூடிய ஒரு ஆவணமாகவே வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே இவ்வாரம் இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்திலேனும் 21 ஐ சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று வினவிய போதே அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கேசரி வார வெளியீட்டுக்கு இதனைத் தெரிவித்தார்.

'21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள் , சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்டவற்றுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் போது பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அவை தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை 21 இல் உள்ளடக்குதல் மற்றும் அதனை இறுதிப்படுத்தல் தொடர்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருத்தங்களை உள்ளடக்கிய 21 ஐ நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.

இரட்டை குடியுரிமையுடைய நபர் பாராளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என்ற யோசனையை திருத்தங்களின்றி செயற்படுத்தவும், ஜனாதிபதி பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பிரதமரை பதவி நீக்க வேண்டும் என்ற திருத்த யோசனைக்கும் , பத்தாவது பாராளுமன்றத்தில் அமைச்சரவை விவகாரத்தில் ஜனாதிபதியானவர் பிரதமரின் பரிந்துரைக்கமையவே செயற்பட வேண்டும் உள்ளிட்ட திருத்தங்களுக்கு சகல தரப்பும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22