உரமின்மையால் நெற்செய்கை பாதிப்பு

Published By: Vishnu

12 Jun, 2022 | 11:05 AM
image

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பசளை தட்டுப்பாட்டுடன் நெற் செய்கை விவசாயத்தில் ஈடுபாடு கொண்டு வரும் விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்திலும் இம் முறை சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஆனாலும் விவசாய செய்கைக்கான உரிய விலைச்சலை பெற பசளை தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கின்றனர்.

ஒரு அந்தர் பசளை 1500 ரூபாவாக ஆரம்பத்தில் இருந்த வேலையில் அதன் தற்போதைய விலை 42000 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளதுடன் இதனை பெறுவதும் பெறும் சிரமமாக உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான கந்தளாய் குளத்தினை நம்பி மாத்திரம் சிறுபோக பெரும்போக செய்கை என சுமார் 22ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதில் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய வகையில் மொத்தமாக 8844 ஏக்கர் நிலப்பரப்பில் சிறு குளங்களை நம்பியும் நெற் செய்கை பண்ணப்படுகிறது இதில் 3889 விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இம் முறை அதிக விவசாய செய்கையில் ஈடுபட்டாலும் உரிய நேரத்திற்கு உரம் கிடைக்காமை பாரிய சிக்கல்களை சந்திக்க நேரிடும் எனவும் விவசாய துறையில் வீழ்ச்சி ஏற்பட்டு விடும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதிக விலைச்சலின்றி பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது டீசல் எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும் இன்னும் விதைப்பதன் முதல் அருவடை வரை பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது .

சிவப்பரி நெல் மூடை ஒன்றின் விலை 11 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது . மொத்தமாக தம்பலகாமம் ,முள்ளிப்பொத்தானை பகுதியில் செயற்படும் 21 விவசாய சம்மேளனங்கள் கூட்டாக தங்களது கோரிக்கையை அரசாங்கத்துக்கு முன்வைத்துள்ளனர்.

யூரியா உரம் போன்றவற்றை விவசாயிகளுக்கு பெற்றுத்தருமாரும் விவசாயிகள் மேலும் கோரிக்கை விடுக்கின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56