தசுன் ஷானக்கவின் அதிரடியில் அவுஸ்திரேலிய அணியை 4 விக்கெட்களால் வெற்றிகொண்டது இலங்கை

11 Jun, 2022 | 11:29 PM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (11) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் தசுன் ஷானக்கவின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் 4 விக்கெட்களால் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டியது.

எனினும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா தொடரை 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் தனதாக்கிக்கொண்டது.

அவுஸ்திரெலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 177 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஒரு பந்து மீதமிருக்க 6 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

16ஆவது ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்களை மாத்திரம்  இலங்கை  பெற்றிருந்தது. கடைசி 26 பந்துகளில் வெற்றிக்கு மேலும் 69 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் இலங்கை தோல்வி அடையும் என கருதப்பட்டது.

ஆனால், அதிரடியில் இறங்கிய அணித் தலைவர் தசுன் ஷானக்க 25 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ் உட்பட ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைக் குவித்ததுடன் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் சாமிக்க கருணாரட்னவுடன் (14 ஆ.இ.) 25 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இவர்களைவிட முன்வரிசையில் தனுஷ்க குணதிலக்க (15), பெத்தும் நிஸ்ஸன்க (27), சரித் அசலன்க (26), பானுக்க ராஜபக்ச (17) ஆகியோர் துடுப்பாட்டத்தில் சுமாரான பங்களிப்பை இலங்கைக்கு வழங்கினர்.

சரித் அசலன்கவும் பெத்தும் நிஸ்ஸன்கவும் 2ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வுட் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தத் தொடரில் மூன்றாவது தடவையாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற  அவுஸ்திரேலியா   முதல் தடவையாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து  20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரோன் பின்ச் (29), டேவிட் வோர்னர் (39) ஆகிய இருவரும் முதல் விக்கெட்டில் 24 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எனினும் மொத்த எண்ணிக்கை 85 ஓட்டங்களாக இருந்தபோது அடுத்தடுத்த 3 பந்துகளில் க்ளென் மெக்ஸ்வெல் (16), டேவிட் வோர்னர் (39), ஜோஷ் இங்லிஸ் (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

இதன் காரணமாக அவுஸ்திரேலியா தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், ஸ்டீவ்  ஸ்மித் (37 ஆ.இ.), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (38) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களை பகிர்ந்து அணிக்கு சற்று தெம்பூட்டினர்.

தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித், மெத்யூ வேட் (13 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து  43 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியா கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவினர்.

இலங்கை பந்துவீச்சில் சேர்ந்து தீக்ஷன 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: தசுன் ஷானக்க.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20