உஸ்பெகிஸ்தானை கட்டுப்படுத்திய இலங்கை, இன்று தாய்லாந்துக்கு சவால் விடுக்குமா?

Published By: Digital Desk 5

11 Jun, 2022 | 11:30 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை - தாய்லாந்து அணிகளுக்கு இடையிலான ஏ.எவ்.சி. ஆசிய கிண்ண சி குழு தகதிகாண் போட்டி நாமங்கன், மார்க்அஸி விளையாட்டரங்கில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பலம்வாய்ந்த உஸ்பெகிஸ்தான் அணி கோல்மழை பொழிவதை கட்டுப்படுத்தும் வகையில் தடுத்தாடும் வியூகத்தை பின்பற்றிய இலங்கை அணி இன்றைய தினமும் அதே வியூகத்துடன் விளையாடவுள்ளது.

அதேவேளை, சந்தர்ப்பத்துக்கு ஏற்ப எதிர்த்தாடும் வியூகத்தையும் இலங்கை அணி பிரயோகிக்கும் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய அதே பதினொரு வீரர்கள் இன்றைய போட்டியிலும் முதல் 11 வீரர்களாக அணியில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணியின் புதிய பயற்றுநராக அண்ட்றூ மொறிசன்  பொறுப்பேற்ற பின்னர் வீரர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் அவர்களது கால்பந்தாட்ட ஆற்றல்களில் முன்னேற்றத்தையும் காணக்கூடியதாக இருக்கிறது.

இன்றைய போட்டியிலும் இலங்கை அணி பெரும்பாலும் 4 - 3 - 3  அல்லது 4 - 4 - 2 என்ற வியூகத்தை அமைத்து விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வீயூகத்தைக் கொண்டு தாய்லாந்து வீரர்களைக் கட்டுப்படுத்த இலங்கை அணி முயற்சிக்கவுள்ளது.

இலங்கையும் தாய்லாந்தும் இதற்கு முன்னர் சந்தித்துள்ள 5 சந்தர்ப்பங்களிலும் தாய்லாந்து வெற்றிபெற்றுள்ளது. 1993 இலும் 2001 இலும் விளையாடிய போட்டிகளில் இலங்கை சவாலாக விளங்கி தோல்வி அடைந்தது. மற்றைய 3 போட்டிகளிலும் தாய்லாந்து இலகுவாக வெற்றிபெற்றிருந்து.

எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் தாய்லாந்துக்கு இலங்கை அணி மிகுந்த சவாலாக விளங்கும் என நம்பப்படுகிறது.

கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற சி பிரிவுக்கான ஆரம்பப் பொட்டிகளில் இலங்கையை உஸ்பெகிஸ்தானும் மாலைதீவுகளை தாய்லாந்தும் ஒரே எண்ணிக்கையான 3 - 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டிருந்தன.

இன்றைய போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி பெரும்பாலும்): சுஜான் பெரேரா (தலைவர்), ஹர்ஷ பெர்னாண்டோ, சரித்த ரத்நாயக்க, சலன சமீர,  சமோத் டில்ஷான்,   அசிக்கூர் ரஹ்மான்,  செபஸ்தியாம்பிள்ளை ஜேசுதாசன், சசங்க டில்ஹார, மொஹமத் ஆக்கிப்,  டிலொன் டி சில்வா, ஷபீர் ரஸூனியா, ஆகியோர் முதல் பதினொருவராக களம் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாற்று வீரர்களாக ருவன் அருணசிறி, கவீஷ் லக்ப்ரிய பெர்னாண்டோ, அபீல் மொஹமத், தர்மகுலநாதன் கஜகோபன், சத்துரங்க மதுஷான், மொஹமத் பஸால், அப்துல் பாசித், மரியதாஸ் நிதர்சன், செபமாலைநாயகம் ஜூட் சுபன்,  மொஹமத் அமான், ஷெனால் சந்தேஷ், மொஹமத் ஷிபான் ஆகியோர் இடம்பெறுவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31