சம்பியன்ஸ் லீக் : நியூ ஸ்டார் - செரெண்டிப் பரபரப்பை ஏற்படுத்தவல்லது

Published By: Digital Desk 5

11 Jun, 2022 | 02:33 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 14 அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தின் இரண்டாம் கட்டப் போட்டிகள் இவ்வாரம் நடைபெறுகின்றன.

மாத்தறையில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற போட்டியில் பொலிஸ் கழகத்தை 3 - 2 என்ற கோல்கள் கணக்கில் மாத்தறை சிட்டி வெற்றிகொண்டிருந்தது.

இரண்டாம் கட்டத்தில் இன்று சனிக்கிமை (11) மேலும்  4 போட்டிகள் நடைபெறவுள்ளன. 

அவற்றில் இரண்டு அறிமுக அணிகளான பாணந்துறை நியூ ஸ்டார், கேகாலை செரெண்டிப் ஆகிய கழங்களுக்கு இடையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள போட்டி மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த இரண்டு கழகங்களும் கடந்த வாரம் தத்தமது முதலாம் கட்டப் போட்டிகளில் முறையே கிறிஸ்ட ல்    பெலஸ், சென் மேரிஸ் ஆகிய அணிகளை வெற்றிகொண்டிருந்தன.

கிறிஸ்டல் பெலஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 கோல்களைப் புகுத்திய இளம் வீரர் கெலும் ப்ரியன்கர, அணித் தலைவர் நதீக்க புஷ்பகுமார், மொஹமத் அனாஸ், மற்றொரு முதிய அனுபவம் வாய்ந்த வீரர் ஷிவன்க, மொஹமத் அஸ்மின், மொஹமத் ரிஸ்லி ஆகியோர் நியூ ஸ்டார் அணிக்கு மற்றொரு வெற்றியைத் தேடிக்கொடுக்க முயற்சிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

செரெண்டிப் அணியில் முதலாவது ஹெட் - ட்ரிக் முறையில் கோல்களைப் புகுத்திய ஆபிரிக்க வீரர் அசன்டே இவான்ஸ் மற்றும் இரண்டு ஆபிரிக்கர்களான குவாட்ரி ப்றின்ஸ், ஒபோரி ஜோர்ஜ், அணித் தலைவர் ரியாஸ் மொஹமத், மொஹமத் ஆசிர் ஆகியோர் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

எனினும் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்று அறுதியிட்டு கூறமுடியாது. ஆனால், போட்டி கடைசிவரை விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென் மேரிஸ் வெற்றிபெறுமா?

இ.போ.ச. அணிக்கும் நாவாந்துறை சென். மேரிஸ் அணிக்கும் இடையிலான போட்டி குருநாகல், மாளிகாபிட்டி மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் தத்தமது ஆரம்பப் போட்டிகளில் முறையே மொரகஸ்முல்லை, செரெண்டிப் ஆகிய அணிகளிடம் தோல்விகளைத் தழுவியிருந்தன.

இன்று நடைபெறவுள்ள போட்டியில் சென். மேரிஸ் அணிக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சென். மேரிஸ் வீரர்கள் சிறந்த புரிந்துணர்வுடனும் ஓரணி என்ற உணர்வுடனும் விளையாடுவது அவசியம்.

சுப்பர் சன் - சோண்டர்ஸ்

பேருவளை சுப்பர் சன் அணிக்கும் சோண்டர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நடுநிலையான காலி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

முதிய அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடி சொலிட் கழகத்துடனான போட்டியை சமப்படுத்திக்கொண்ட சோண்டர்ஸ் கழகம் இன்றைய போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெலிக்கன்ஸ் கழகத்துடனான தனது ஆரம்பப் போட்டியில் கடும் சவாலுக்கு மத்தியில் 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டிய சுப்பர் சன், 2ஆவது வெற்றிக்கு குறிவைத்து விளையாடவுள்ளது.

இதேவேளை, கம்பளை கிறிஸ்டல் பெலஸ் கழகத்துக்கும் குருநாகல் பெலிக்கன்ஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டி கண்டி போகம்பறை விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35