பஷில் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்தமை மற்றுமொரு அரசியல் நாடகம் - திஸ்ஸ விதாரண

Published By: Digital Desk 3

11 Jun, 2022 | 12:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் செயற்பட்டதை போன்று தற்போதும் அமெரிக்காவின் தேவைக்காக செயற்படுகிறார். 

தற்போதைய அரசாங்கம் பிரச்சினைகளை குறிப்பிடுகிறதே தவிர நடைமுறைக்கு சாத்தியமான தீர்வினை முன்வைக்கவில்லை. பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்தமை பிறிதொரு அரசியல் நாடகம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிறைவடைந்த இரண்டு வருட பதவி காலத்தில் நான்கு அரசாங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளார்கள்.

பெரும்பான்மை பலம் உள்ளது என்ற காரணத்தினால் ஜனாதிபதி உட்பட அரசாங்ககூட்டணியில் அங்கம் வகித்த ஏனைய தரப்பினரது ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கவில்லை. 

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துகளுக்கு ஜனாதிபதி அவதானம் செலுத்தாத காரணத்தினால் அரசியல் ரீதியில் பாரிய விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளது.

சகல கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி எம்முடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட நிலையில் எவருக்கும் தெரியாமல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார். நாட்டு முழுமையாக புறக்கணிக்கப்பட்ட ஒருவரை பிரதமராக நியமித்தமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயற்படாகும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்ற காரணத்திற்காக கட்சி அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்து, ஒருசில விடயங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளோம். 

இருப்பினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் செயற்பட்டதை போன்று தற்போதும் அமெரிக்காவின் தேவைக்கமைய செயற்படுகிறார்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் பிரச்சினைகளை எதிர்க்கொள்ள நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகிறாரரே தவிர நடைமுறைக்கு சாத்தியமான எவ்வித தீர்வையும் அவர் முன்வைக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து வேறு மாற்று திட்டங்கள் ஏதும் அரசாங்கத்திடம் கிடையாது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்புரிமையை துறந்துள்ளமை பிறிதொரு அரசியல் நாடகமாகும். அரசியலில் இருந்து அவர் ஒருபோதும் ஓய்வு பெறமாட்டார். 

வெகுவிரைவில் அரசியல் ரீதியில் ஒரு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21