அரச வருவாய் இழக்க நேர்ந்தமைக்கு வரிக்கொள்கையின் மாற்றமே காரணமெனக் கூறுவது நியாயமற்றது -    நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ஆட்டிகல  

Published By: Vishnu

09 Jun, 2022 | 09:40 PM
image

(இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்)

2019ஆம் ஆண்டின் இறுதி காலப்பகுதியில் அரசாங்கம் வரி கொள்கையினை மாற்றியமைத்ததால் சுமார் 500 பில்லியன் வரையான அரச வருவாயை அரசாங்கம் இழந்தது என குறிப்பிடுவது நியாயமற்றது.

வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டமை, கொவிட் தாக்கம்  உள்ளிட்ட பொது காரணிகளினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. என நிதியமைச்சின் முன்னாள் செயலாளர். எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2019.12.04 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்பித்த யோசனைக்கமையவே  வரி கொள்கை மாற்றியமைக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர்  பி.பி.ஜயசுந்தர,நிதியமைச்சின் முன்னாள் செயலாளர்  ஆட்டிகல , மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்,நாணய சபையின் உறுப்பினர்கள்,மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஆகியோர் 08 ஆம் திகதி புதன் கிழமை நேற்று அரச நிதி தொடர்பான  குழுவில் முன்னிலையாகினர்.

அ மைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கையில்  அதன் விடயதானங்களை வகுத்த அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும்.இருப்பினும் இவ்வாறான தன்மையை காணமுடியவில்லை.மத்திய வங்கியின் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்ட வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது என  குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

கொவிட் பெருந்தொற்று தாக்கம் செலுத்துவதற்கு முன்னர் அரசியல் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கொள்கை ரீதியிலான தீர்மானங்களினால் எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல் நிலைமை குறித்து  நாணய சபை அறிக்கை சமர்ப்பித்ததா என அரச நிதி தொடர்பிலான தெரிவு குழுவின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

அவ்வாறான தீர்மானம் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டு அது தெரிவு குழுவிற்கும் சமர்ப்பிக்கப்பட்டது என ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி ஜயசுந்தர இதன்போது பதிலளித்தார்.

பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகள் முன்னெடுத்த கொள்கை ரீதியிலான தீர்மானங்கள்  தவறானதாக அமையும் பட்சத்தில்  பொறுப்புக்கூற வேண்டியவர்கள்  உயர் அதிகாரிகளுக்கு  அவற்றை அறிவிக்க நடவடிக்கையினை முன்னெடுத்தனரா என  குழுவினர் கேள்வி எழுப்பினர்.

.இதன்போது கருத்துரைத்த மத்திய வங்கியின் ஆளுநர்  நந்நலால் வீரசிங்க அரசில் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் அரசியல் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளுக்கும், அரச அதிகாரிகளுக்கும் இடையிலான வேறுபாடு அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

இரண்டு வருடகாலத்தில் பொருளாதாரத்தை ஒழுங்கான முறையில் முன்னெடுத்து செல்லாமல்,பொருளாதாரத்தை பாதிப்பிற்குள்ளாகியதை தாங்கள்  அறியவில்லை என்றும்  அது அரசியல் தீர்மானம் எனவும்  அரச அதிகாரிகள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55