அதிக செலவு செய்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது - காஞ்சன

Published By: Vishnu

10 Jun, 2022 | 06:22 AM
image

(இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்)

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் தொடர்ந்து அதிக செலவு செய்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது.

புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் செயற்திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு மின்சார சட்டத்தில் உள்ள தடையை நீக்கிக்கொள்ள  சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர சபையில் வலியுறுத்தினார்

பாராளுமன்றில் 09 ஆம் திகதி வியாழக்கிழமை மின்சார சட்டம் திருத்தச்  சட்ட மூலத்தை  சமர்ப்பித்ததை தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் ;

2009 .இலக்கம் 20 என்ற மின்சார சட்டத்தை  திருத்தம் செய்யும் வகையில் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்துள்ளேன். இச்சட்டமூல திருத்தத்தை தொடர்ந்து 2013.08.08ஆம் திகதி முதல் காணப்பட்ட தடையினை நீக்கிக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறேன்.மின்சார சட்டத்தின் 43ஆவது அத்தியாயத்தில்  அ மற்றும் ஆ என்ற பகுதியில்  அல்லது என்ற சொற்பதம் 2013.31ஆம் இலக்க சட்டத்தில் நீக்கப்பட்டதால் தடைகள் தோற்றம் பெற்றுள்ளன. 

 மின்விநியோக கட்டமைப்பில் பாரிய நெருக்கடியினை எதிர் கொண்டுள்ள போது இயற்கை  வளங்களை பயன்படுத்தி மின்கட்டமைப்பின் நெருக்கடிக்கு ஏன் தீர்வு காண முடியாது என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.பாரிய நிதியை செலவழித்து  நிலக்கரியை கொள்வனவு செய்து மின்னுற்பத்தி செய்வது தொடர்பில் பல்வேறு கேள்வி எழுந்துள்ளன.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட  ஜனாதிபதி கோத்தபய  மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ  புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்தை தமது செயற்திட்ட கொள்கையாக குறிப்பிட்டுள்ளனர்.மின்வலுத்துறை சட்டத்தில் உள்ள தடையினை நீக்கிக்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலும், தொழிற்சங்கங்களுக்கிடையில் கருத்தொற்றுமை இல்லாத காரணத்தினால் நாடு பாரிய நெருக்கடியினை தற்போது எதிர்க்கொண்டுள்ளது.

மின்னுற்பத்திக்காக வருடாந்தம் 756 பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது.இருப்பினும்  மின்னுற்பத்தியினால் கிடைக்கப்பெறும் வருமானம் 250 பில்லியனாக காணப்படுவதால் மின்சார சபை மின்கட்டணத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்துகிறது.முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நுரைச்சோலை அனல் மின்நிலையம் உருவாக்கம் தொடர்பில் யோசனையை முன்வைக்கும் போது பெரும்பாலானோர் கடுமையாக எதிர்த்தார்கள்.எதிர்ப்பிற்கமைய நுரைச்சோலை மின்நிலையத்தை உருவாக்காமலிருந்தால் தற்போது நாளாந்தம் சுமார் 6 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை அமுல்படுத்த நேரிட்டிருக்கும்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் தொடர்ந்து எரிபொருள்,நிலக்கரி ஆகியவற்றை பயன்படுத்தி மின்சாரத்தை தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாது.புதுப்பிக்கத்த சக்தி வளங்கள்,சூரிய சக்தி ஆகியவற்றை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிகம் வாய்ப்பு உள்ள போதும் ஒரு சில சட்ட சிக்கல்களினால் குறித்த செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் உள்ளது.

பொது கொள்கையினை கருத்திற்கொண்டு  சகல தரப்பினரும் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இச்சட்ட திருத்தத்ததை தொடர்ந்து மின்னுற்பத்தி செலவை குறைத்து அதன் சலுகையை நாட்டு மக்களுக்கு வழங்க அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50