இலங்கைக்கான இந்தியாவின் உதவியை பாராட்டியது சீனா - இணைந்து செயற்பட தயார் எனவும் தெரிவிப்பு

Published By: Rajeeban

09 Jun, 2022 | 11:43 AM
image

இலங்கைக்கு உதவும் விடயத்தில் இந்தியாவுடன் இணைந்து செயற்படதயார்என சீனா தெரிவித்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜாவோ லிஜியான் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஆதரவளிக்கும் இந்தியாவின் பெரும் முயற்சிகளை பாராட்டியுள்ள அவர் இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவுவதற்காக இந்தியா சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இந்தியாவின் பெரும் முயற்சிகளை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்,நாங்கள் அதனை அங்கீகரித்துள்ளோம்,நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை உட்பட ஏனைய நாடுகள் அந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு உதவுவதற்கு சர்வதேச சமூகம்  இந்தியாவுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியா இந்த வருடம் வழங்கியுள்ள 3.5 பில்லியன் டொலர் உதவியை சீனா ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம்,இலங்iயில் இரண்டு வல்லரசுகளும் புவிசார் அரசியல் போட்டியில் ஈடுபட்டுள்ள தருணத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் இலங்கையின் வடபகுதி யாழ்குடாநாட்டில் சீனா முன்னெடுக்கவிருந்த புதுப்பித்தக்க சக்தி திட்டங்களை இலங்கை இந்தியாவிற்கு வழங்கியமை குறித்து சீனா கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன்  கேள்விப்பத்திர முறை மூலம் பெறப்பட்ட திட்டமொன்றை இடைநிறுத்துவது இலங்கை குறித்து வெளிநாட்டு முதலீட்டாளர்களிற்கு சிறந்த செய்தியை வழங்காது என கொழும்பிற்கான சீனா தூதுவர் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:25:52
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22