ஜூன் மாதம் வான் வெளியில் ஒரு திருவிழா

Published By: Digital Desk 5

10 Jun, 2022 | 09:39 AM
image

குமார் சுகுணா 

இறைவனோ இயற்கையோ ஏதோ நம் அறிவுக்கு எட்டாத மிக பெரிய சக்தி இருக்கின்றது என்பது உண்மை அதனால்தான்  வியத்தகு அதிசயங்கள் ஒவ்வொரு நிமிடமும் பூமியில் எங்கோ ஓர் இடத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது.

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் மட்டும் அல்ல கோடான கோடி நட்சத்திரங்கள் நாம் அண்ணாந்து பார்க்கும் அண்ட வெளியில் உலா வந்துக்கொண்டிருக்கின்றன.

என்னதான் மனிதன் ஆராய்ச்சிகளை நடத்தினாலும் சில விடயங்கள் எம்மை மீறிய சக்கதியினுடையது. விஞ்ஞானம் என்பது கூட அந்த சக்தி முன்பு சில நேரங்களில் மெளனமாகி போய்விடுகின்றது.

இயற்கையோ இறைவனோ அவை நடத்தும் அதிசயங்களில் ஒன்றுதான் இந்த மாதம் நடந்து கொண்டிருக்கின்றது. ஆம் வானில்5 கோள்களை ஒரே நேர் கோட்டில் காணும் அதிசயம் அது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நான்கு கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றிய நிலையில், தற்போது, ஜூன் மாதத்தில் புதன் கோளும் இந்த அணிவகுப்பில் இணையவுள்ளது. இதனை வெறும் கண்களால் பார்க்கலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாதம் முழுவதும், சூரியன் உதயமாவதற்கு சற்று முன்பு, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவியலாளர்கள் தெரிவித்திருந்தனர்.

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேர்கோட்டில் ஐந்து கோள்கள் காட்சியளிக்கவுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வான்வெளி அண்டத்தில் சூரியனைச் சுற்றி பூமி ஒன்பது கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு புதன், வெள்ளி,  செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய ஐந்து கோள்களும் ஒரே இடத்தில் காட்சி அளித்துள்ளன. இவை கடந்த ஜூன் 3 மற்றும் 4 ஆகிய இரு தினங்களில் விண்வெளியில் காட்சி அளித்துள்ளன.

தொடர்ந்து வருகிற ஜூன் 24 அன்று இந்த ஐந்து கோள்களும் ஒரே இடத்தில் காட்சியளிக்க உள்ளன.

இவ்வாறு ஒரே நேர்கோட்டில் 5 கோள்கள் தோன்றும் நிகழ்வு 2002 இல் நடந்தது. இந்த வருடத்தில்  இந்த ஜூன் மாதத்தில் நிகழும் இந்த அரிய நிகழ்வு அடுத்த முறை 2040 இல்தான் நிகழும். சூரிய உதயத்திற்கு சுமார் 45 நிமிடங்களுக்கு முன் இந்த அரிய நிகழ்வை நம்மால் காண இயலும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை நமது வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என்பதுதான் மற்றுமொரு அதிசயம். மேலும் அதிகாலையில் வெள்ளி கோளினை நாம் மிக சாதாரணமாக பார்ப்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right