தங்கொட்டுவ பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மஹா - ஓயாவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுவந்த குழுவொன்றை கைதுசெய்யாததன் காரணமாக குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தங்கொட்டுவ - ஜகுரவல பகுதியில் சிலர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பிக்க ரணவக்கவுக்கு இரகசிய தகவலொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் குழுவொன்று குறித்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸ் குழுவினர்  ஒருவரையும் கைதுசெய்யாததன் காரணத்தினால் இவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.